பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டு வரலாறு

13

கொணர்ந்தனரென்றும், அக்காலத்தே தென்னாட்டு வேந்தனொருவனும் பிராமணர் பத்தாயிரவரும் மேற்கொண்டு பவுத்தராயினரென்றும் நாகார்ச்சுனர் வரலாற்றால் அறிகின்றோம். புத்த யோகவாதம் மணிமேகலை காலத்தில் விளக்கப்பெற்று நிலவ, அதனைத் திக்கநாதர் பின்பு வட நாட்டிற் பரப்பினரென்றலும் உண்டு. ஹியூன்சாங் வந் திருந்தபோது ஈழநாட்டிலிருந்து புத்த துறவிகள் முந்நூற்றுவர் வந்தார்களெனவும், ஹியூன்சாங், அவர்களோடு கலந்து அளவளாவினர் எனவும்[1] கூறுவர்.

ஹியூன்சாங் காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய பவுத்தம் தேரவாதமாகும். தேரர்கட்கு நூறு சங்காராமங்கள் உண்டு. தேரர் பத்தாயிரவருக்குக் குறையார். தியானவாதம் என்ருெரு பிரிவும் தென்னாட்டுப் பவுத்தத்தில் உண்டு. இதனை, கி.பி. 527-இல் முதன்முதலாகச் சீன நாட்டுக்குக் கொண்டு சென்றவன் போதி தருமன் என்னும் காஞ்சி நகர வேந்தன் ஒருவனுடைய மூன்றாம் மகன்.

இவ்வாறு தென்னாட்டினின்றும் வட நாட்டுக்குச் சென்று சிறப்புமிக்க திராவிடப் புத்தருள், திக்கநாகனர் சிற்ந்தவராவர். பல்லவவேந்தன் ஒருவனுடைய ஆட்சியில் உயர் நிலைப்பதவியில் இருந்த ஒரு தலைவனுடைய முத்ல் மகன் திக்கநாகன். இவர் வடமொழியில் வல்லுநராகி நாலந்தா பல்கலைக் கழகம் சென்று அங்கே தமது சொல்வன்மையால் பெருஞ் சிறப்புற்றார். அவர்க்குப்பின் அவருடைய மாணவரான தருமபாலர் என்பார் அப் பல்கலைக் கழகத்தே மாணவராயிருந்து பின்னர் அதற்குத் தலைவராகவும் விளங்கினார். தருமபாலருடைய மாணவர் சீலபத்திரர் என்பவர். அவர் சிறப்புற்ற நாளில், தென்னாட்டிலிருந்து சென்ற பார்ப்பனனொருவனுடன் பல நாட்கள் அரிய சொற்போர்கள் நடத்தினரென்றும், முடிவில் சீலபத்திரர் வெற்றி பெற்றாரென்றும் ஹியூன்சாங் கூறியுள்ளார்.

இத்துணைச் சிறப்புற்று விளங்கிய புத்த சமயத்தைப் பற்றிக் கூறும் பாகியானோ ஹியூன் சாங்கோ பிறரோ


  1. 1. life of Hiuen Tsang by Beal. p. 139.