பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

சைவ இலக்கிய வரலாறு

நோக்குமிடத்து, இங்கே மானும் மரையுமாகிய விலங்கினங்களும் மயிலினங்களும் கலந்து வாழ்கின்றன ஒரு பால் களிற்றி யானைகள் பிடிகளோடு கூடியுறைகின்றன : ஏனல் விளையும் புனங்களின் அயலே கரடிகள் காணப்படுகின்றன ; ஏனங்கள் நிலத்தைக் கிளறுவதால் புதைந்து கிடக்கும் மணிகள் வெளிப்படுகின்றன ; ஒரு பால் குறவர் தினைப்புனம் அமைத்துள்ளனர்; குறமகளிர் கவணை ஏந்தி விளையும் புனங்களைக் காவல் புரிகின்றனர் ; வேடர்கள் மலைத்தேனை இலைத்தொன்னைகளிற் பிழிந்து உண்கின்றனர்.[1]

திருக்கழுக்குன்றமும் குறிஞ்சிப்பகுதியே யாதலின், அங்கே பிடியானைகள் கன்றொடு சூழ்வருவதும், களிறுகளும் பிடிகளும் கலந்துறைவதும், வெள்ளிய அருவிகளில் மணியும் முத்தும் வந்து வீழ்வதும், பாலுண்ணும் குட்டிகளைத் தழுவிக்கொண்டு முசுக்கலைகள் பாறைமீது பாய்வதும், தேனினமும் வண்டினமும் இன்னிசைபாட, கானமயில் களித்திருப்பதும், சந்தன மரங்கள் இனிய மணம் கமழ்வதும், மிக்க மழையால், விளைந்து முதிர்ந்த மூங்கில்கள் முத்துக்களைச் சொரிவதும் பிறவும் இனிய காட்சியளிக் கின்றன.[2]

வெஞ்சமாக் கூடல் என்பது கருவூர்க்கு அண்மையில் முல்லை நிலப்பகுதியிலுள்ளதோர் ஊர். இதன் அருகே சிற்றாறு ஒன்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது. இதன் கீழ்க்கரையில் வெஞ்சமாக்கூடல் இருக்கின்றது. இதனைச் சூழ்ந்த பகுதிமுற்றும் முல்லை நிலமேயாகும். இதனைக் காணும் நம்பியாரூரர் இது வழங்கும் இயற்கைக் காட்சியில் ஈடுபடுகின்றார்.

சிற்றாற்றின் நீர்ப்பெருக்கில் காட்டில் வளரும் மூங்கில் இடைப்பிறந்த முத்துக்களும், ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி முதலியனவும் வருகின்றன ; சந்தனமும் அகிலும் மரிைகளும் கரையில் ஒதுக்கப்படுகின்றன. வெஞ்சமாக்


  1. சுங் தே. 79 : 1-10
  2. ௸ 81 : 1-10.