பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

225

வயல்களில் கயல் மீன்கள் விளையாடக் கடலில் வாழும் வளைகள் ஏனைவளைகளையும் சலஞ்சலங்களையும் கரையிற் சேர்க்கின்றன. பூம்பொழில்களில் வண்டிருந்து பண்பாடி இன்புறுகின்றது.[1]


இயற்கை நலங்களை எடுத்துக் காட்டும் நம்பியாரூர்ருடைய திருப்பாட்டுக்கள், அவ் வியற்கையில் காணப்படும் நிகழ்ச்சிகள் சிலவற்றை மிக்க அழகுறக் கூறுகின்றன. இவ்வியற்கைக் காட்சிகளில் சிலவற்றை யெடுத்தோதும் வகையால் பண்டைத் தமிழாசிரியன்மார் மக்களது பண்பாட்டினையும் உள்ளுறுத்துரைக்கும் இயல்புடையவர். இடைக்காலத்தே உள்ளுறுத்துரைக்கும் இம்முறையை நெகிழ்த்து இயற்கைக் காட்சிகளை மாத்திரம் எடுத்தோதிப் பிறரை இன்புறுத்தித் தாமும் இன்புறும் செயல் உளதாயிற்று. இவ்விரு கூறுகட்கும் இடைப்பட்ட காலம் நம்பியாரூரர் வாழ்ந்த காலம். அக்கால நிலைக்கு இயைய நம்பியாரூரர் இயற்கை கிகழ்ச்சிகள் சிலவற்றை எடுத்துரைக்கின்றார்.

குறமகளொருத்தி தினைப்புனம் காத்து வருகையில், கிளிகள் கூட்டமாய் வந்து தினைக் கதிர்களிற் படிந்து தினையைக் கவர்கின்றன; அவள் ஆலோலம் செய்து வெருட்டுகின்றாள்: அவ்வோலத்தையும் தன்னினமான கிளியின் குரல் என்றே கருதி அவை நீங்காதே இருக்கின்றன , அதனால் அவள், “என்னை இக்கிளி மதியாதிருக்கின்றது” எனச் சிவந்து கையில் கவணேத்தி ஒலி செய்கின்றாள்; அதன் பின்பே, அக்கிளிகள் அஞ்சி நீங்கிச் சீபருப்பத மலை மேல் திரிந்து ஏறுகின்றன ; இதனே,

மன்னிப்புனங் காவல்மட
    மொழியாள் புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்தே கவைக்
    கோலிக் கதிர் கொய்ய
என்னைக் கிளி மதியாது

    என்று எடுத்துக் கவண் ஒலிப்பத்

  1. சுந். தே. 71 : 1.10.
    SIV–15