பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

சைவ இலக்கிய வரலாறு

தென்னற்கிளி திரிந்து ஏறிய

    சீபர்ப்பத மலேயே ”[1]

என்று பாடுகின்றார்.

வேழமொன்று மதங்கொண்டு அறிவு திரிந்து தன் பிடி யானையை நோக்கி “நீ மாற்றுக் களிருென்றை அடைந்தாய்” எனத் தன் கையை மேலெடுத்துப் பிளிறிப் பூசலிட்டு மதம் ஒழுக்கி நின்றது. அதுகண்ட பிடியானை, “இது கேட்கத் தரியேன்” என்று சொல்லி அயல் அறியத் தூற்றி நிற்கிறது; களிறு, உண்மையுணர்ந்து தன் செயலுக்கு வருந்திப் பிடியைத் தேற்றித் தான் இனி அவ்வாறு செய்வதில்லை யெனச் சூளுறவு செய்து கூடுகிறது. இந் நிகழ்ச்சியை,

“மாற்றுக் களிறடைந்தாய்
    என்று மதவேழம் கையெடுத்து
மூற்றிக் கனல் உமிழ்ந்து மதம்
    பொழிந்து முகஞ் சுழியத்
தூற்றத் தரிக்கில்லேன்
    என்று சொல்லி அயலறியத்
தேற்றிச் சென்று பிடி

    சூளறும் சீபர்ப்பத மலையே” [2]

என்று இனிமை மிகப் பாடியிருப்பது காணலாம்.

மக்கட்கு அறிவு வழங்கல்

மக்களுயிர் உலகத்தோடும் இறைவனோடும் தொடர்புறும் இயைபுடையது. உலகத்தோடு இயைந்து வாழ் வாங்கு வாழும் வகையால் இறைவன் திருவருள் உண்மை யுணர்ந்து, அதனோடு இயைந்து, ஞானம் பெற்று வீடு பேறு எய்தும் என்பது சிவநெறியின் முடிபு. வாழ்வாங்கு வாழ்தற்குத் துணை, உடம்பு உலகு நுகர்பொருள் என்பனவாம். அவற்றைத் துணையாகக் கொண்டு அவை நல்கும்


  1. சுந். தே. 79 : 3.
  2. ௸ 79 : 6.