பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

233

திப்பிய கீதம்பாடத் தேரொடு வாள் கொடுத்தீர்"1 என்று பாடுகின்ருர்.

சொற்களைக் குறைக்கும்வழிக் குறைத்துச் செய்யுள் செய்யும் செந்தமிழ் நடை சிறக்க, பாசம் என்னும் சொல்லிலுள்ள அம்முக்குறைத்துப் பாசமற்றவர் என வரற்குரிய சொற்றொடரொன்றைப் "பாசற்றவர்"2 எனவும், சொல்லுதல் என்னும் பொருளதாகிய பனுவல் என்னும் பெயர்ச் சொல்லை வினைப்படுத்துப் "பனுவுமா பனுவி"3 எனவும் வழங்குகின்றார். இவ்வாறே, "சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்" 4 "அருண்டு என்மேல் வினைக்கு அஞ்சி வந்தடைந்தேன்"5 "நொண்டிக் கொண்டேயும் கிலாய்ப்பன்" 6 "திதையும் தாதும் தேனும் ஞிமிறும், துதையும்"7 என்பன முதலாக வருவன ஆராய்ச்சியாளர் காணத் தகுவனவாம். -

இங்ஙனம் சொற்களைப் புதுப்புது வகையால் ஆக்கும் நாவலர் பெருமானான நம்பியாரூரர், கண்ணபிரானை "யானையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப்பிள்ளை"8 என்றும், நஞ்சுண்ட இறைவனை, "நஞ்சினை யுண்டிட்ட பேதைப் பெருமான்" 9 என்றும் கூறுவர்.

இங்கே இறைவன் நஞ்சுண்டது அறிவுடையார் செயலன்று; பேதையார் செயல் என்றும், ஆயினும் அதனை அவர் பிறர் வாழச்செய்ததனால் பெருந்தகைமையாயிற்று என்றும் புலப்பட "பேதைப் பெருமான்" என்னும் சொல் வித்தகம் அவர் கூற்றில் அமைந்திருப்பது காணத்தக்கது.

தொடக்கத்தில் நம்பியாரூரர் திருவாரூர்க்கு வருகையில், அத் திருவாரூர் தமது ஊரென்றும், அதனை இறைவன் தமக்கு இடமாக்கிக்கொண்டமையின், அங்குவரும் எம்மை


1. சுந் .தே.46:7  2. சுந். தே 50:7
3. சுந் .தே. 67:6  4. சுந் .தே. 73:3
5. சுந் .தே.66:12  6. சுந் .தே. 73:8
7. சுந் .தே. 94:5  8. சுந் .தே. 57:8
9. சுந் .தே. 94:6