பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

சைவ இவக்கியவரலாறு

 எம்மையும் ஏற்றுக் கொள்வாரோ என்பாராய், "எந்தை யிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர்'1 என்று கூறுகின்றார், -

பரவையார் பொருட்டுக் குண்டையூரில் பெற்ற நெல்லை அட்டித்தரல் வேண்டும் என்ற குறிப்புடன் திருக்கோளிலிப் பெருமானை வேண்டுகின்றவர், மகளிரொடு கூடி வாழ்பவர்க்குப் பொருளின் இன்றியமையாமை நன்கு புலப்படும் என்பது பட, "பாதியோர் பெண்ணை வைத்தாய் படரும் சடைக் கங்கை வைத்தாய், மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதியன்றே"2 என்றும், "குரவமருங் குழலாள் உமைநங்கை யோர் பங்குடையாய், பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதியன்றே"3 என்றும் குறித்துரைக்கின்றார். திருக்கோடிக் குழகர், கடற்கரையில் கடிதாய்க் குளிர்காற்று வீச, ஆந்தையும் கூகையும் குழற, கொடியரான வேடர்கள் வாழுமிடத்தே கோயில் கொண்டிருப்பது கண்டு, இங்கே தனியே யிருப்பது கூடாது என்றும்,

"ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அதுதானோ

அற்றப்பட ஆரூர் அது என்று அகன்றாயோ

முற்றாமதி சூடிய கோடிக்குழகா.

எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே"4

என்றும் பரிந்து பாடுகின்றார். திருநாகைக் காரோணத்தில்: இறைவன் திருமுன்னர் நின்று முத்தாரம், மணிவயிரக் கோவை முதலிய நலங்களெல்லாம் வேண்டுமெனக் கேட்பவர், ஒருகால் இறைவன் இவை என்பால் இல்லை யென்று சொல்லி விட்டால் என் செய்வது என நினைத்தவர்போல்,

"மாற்றமேல் ஒன்றுரையீர் வாளா நீர் இருந்தீர்

 வாழ்விப்பன் என ஆண்டிர் வழியடியேன் உமக்கு

ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீரல்லீர்

 அணியாரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில்


1. சுந்.தே. 73:7  2. சுந் தே. 20:8
3. சுந் தே. 20:6  4. சுந் தே. 32:8