பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

நம்பியாரூரர்


தோற்றமிகு முக்கூறில் ஒருகூறு வேண்டும்தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்"1 [1]என்றும்,

"மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே யாட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன் எண்ணிலியுண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் . எம்பெருமான் இது தகவோ இயம்பியருள் செய்யீர் திண்ணென என்உடல் விருத்தி தாரீரேயாகின் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன். நாளைக்கண்ணறையன் கொடும் பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே"2[2] என்றும் இயம்புகின்றார், சேரமான்பெருமாள் தந்தபொருளைப்பெற்றுவரும் நம்பியாரூரரைத் திருமுருகன்பூண்டிக்கு அண்மையில் வேடுவர் ஆறலைத்து அப்பொருளைக் கவர்ந்தேகினராக, ஆரூரர், திருமுருகன்பூண்டி இறைவன் திருமுன் வணங்கி நின்று, "கொடுகுவெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித், திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்குமிடம் இவ்விடம் , முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்வாய், எல்லைக் காப்பது ஒன்று இல்லை யாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே"3[3] என்று கூறுவர். திருவோணகாந்தன் தளியில் இறைவனை வணங்கி, "உமக்கு யான் ஆட்பட்டும் பயன் பெரிது பெற்றிலேன்: ,"இனி யாங்கள் உமக்கு ஆட்படோம்" என்பாராய், "திங்கள்தங்குசடையின் மேல் ஒர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி, ______________________________

 1. சுந்.தே. 46 : 8, 
 2.    ஷ . 46 : 9.

3. ஷ . 49 : 2


  1. சுந்.தே.46:8
  2. சுந்.தே.46:9
  3. சுந்.தே.49:2