பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237

நம்பியாரூரர்


எனக்கு ஆவதொன்று அருளாய்

ஒற்றியூரெனும் ஊருறைவானே"1[1] 
மகத்திற் புக்கதோர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா, அகத்திற் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா எனத் தரியேன், முகத்தில் கண்ணிழந்து எங்ஙனம் வாழ்வேன் முக்கணு முறையோ மறையோதி, உகைக்கும் தண்கடல் இதழ்.வந்து உலவும் ஒற்றியூரெனும் ஊருறைவானே"2[2]   

என்று பாடுகின்றார். பின்பு காஞ்சிமாநகரில் ஒருகண் பெற்றுத் திருவாரூர்க்கு வந்து இறைவனை வணங்குபவர், மற்றைக் கண்ணையும் தரல்வேண்டுமெனப் பரவு. கின்றார். அக்காலையில் சினந்து இறைவனைப் பழிப்பார் போல, ' "விற்றுக்கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பி யாட்பட்டேன், குற்றமொன்றும் செய்ததில்லை கொத்தையாக்கினீர், எற்றுக்கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர், மற்றைக் கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்து போதீரே"3 [3]என்று பல பாட்டுக்களால் பாடுகின்றார், இங்ஙனம் இறைவன்பால் எழுந்து நிலவிய பேரன்பால் பழிப்பது போலவும் பரவுவது போலவும். பாட்டுக்கள் பாடி ஒழுகிய நம்பியாரூரர், இறைவன் மகளிர் வாழும் மனைதோறும் சென்று பலியிரந்த வரலாற்றை நயந்தெடுத்துப் பலியிடும் மங்கையர் கூற்றில் தம்மை வைத்துத் தமது பேரன்பைப் புலப்படுத்துகின்றார். பலியிடுவாளொருத்தி, பலியிரக்கும் இறைவன்பால் கருத்திழந்து, " எம்பால் பலிபெற வேண்டின் நீர் தனித்து வரவேண்டுமே யன்றிப் பெண்ணொருத்தியொடு வருத லால் யாம் பலியிடமாட்டோம், சென்மின்" என்பாளாய், "நீறு நுந்திருமேனிநித்திலம் நீணெடுங் கண்ணினாளொடும், கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நடமினோ" 4' [4]என்று கூறுகின்றாள். இவ்வாறு பலியிடப் போந்த நங்கை யொருத்தி இறைவன்பால் கருத்திழந்து கூறும் கூற்றில் வைத்து, "என்னது எழிலும் நிறையும். ______________________________

1. சுந். தே. 54 : 4.
2. சுந்  தே. 54:9.
         95 : 2. .

4.. ஷ ' 36 : 5.


  1. சுந்.தே.54:4
  2. சுந்.தே.54:9
  3. சுந்.தே.95:2
  4. சுந்.தே.36:5