பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:240


ரினன் ஒருவனைக் குறிக்கின்றது. இவற்றால் நாவலூருடையான் என்றும் மக்கள் தமக்குப் பெயர்பூண்டு விளங்கினர் என்பது தெளியப்படுகிறது. நம் நாவலூருடையாரைப் பெற்றோர் நம்பியாரூரர் என்ற திருப்பெயரிட்டுச்சிறப்பித்தனர் என அவர் வரலாறு கூறுகிறது : “ தவத்தினுள் மிக்கோர் போற்றும் நம்பியாரூரர் என்றே நாமமும் சாத்தி"1எனச் சேக்கிழார்,ஒதுவதும், அவரே ஒரு திருப்பதிகத்தில் தன்னை "நாவல் ஆரூரன் நம்பி 2” என்று குறிப்பதும் ஈண்டு நினையத் தக்கன. இத்திருப்பெயரையே எடுத்தாளும் கல்வெட்டுக்கள் மிகப்பல 3 ஆரூரன் என்பது திருவாரூரில் உள்ள இறைவனுக்குத்திருப்பெயராகும். அதுவே தனக்கும். பெயராயிற்றென அவர், "அம்மான் தன்திருப்பேர்கொண்ட தொண்டன்ஆரூரன்"4என்று எடுத்துக் கூறுதலால், அதனையும் கல்வெட்டாளர்5 மேற் கொண்டனர். மக்களில் சிலர் நம்பியாரூரன் என்ற பெயர் தாங்கியிருக்கின்றனர். திருவெண்ணெய்நல்லூரிலே கிணையன் மகன் சோரனான நம்பியாரூரக்கோன் திருவெண்ணெய்நல்லூர் உடை யார்ஆட்கொண்ட தேவர்க்குப் பாலாடி யருளுமாறு கிளி யூர்மலையமான் ஒருவன் விட்ட பசுக்களைத் தான் ஒம்புவதாக உடன்பட்ட கல்வெட்டொன்று6உளது. இத்திருவெண்ணெய்நல்லூரில் நம்பியாரூரர்க்குத் திருக்கோயிலும் நாள் வழிபாடும் இருந்தன என்றும் அவ்வூர்க் கல்வெட்டுக்கள்7 எடுத்தோதுகின்றன. . நம்பியாரூரரை இறைவன் தடுத்து ஆட்கொண்ட போது அவர் வன்மைகள் பேசினர் என்றும், அதனால் அவருக்கு- ______________________________ 1. பெரியபு. தடுத்தாட். 4. 2. சுந். தே. 53:10, 3. S.I. I.Vol. II. p. ii.

No. 38, 41 ; S. I. I. Vo!. V. 
No. 418. S. I. I. Vol. VII. 
No. 939; A. R. No. 275 of 
1917; 299 of 1917, 37 of 
1920.

4. சுந், தே. 59: 11. 5. S.I.I.Vol.II.p.iii. No. 65. 6. S. I. I. Vol. VII. No. 939. 7. Ibid. No. 945.