பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241

நம்பியாரூர்

 வன்றொண்டர் என்று ஒரு சிறப்புப்பெயர் உண்டாயிற்று என்றும் அவர் வரலாறு கூறுகிறது .அவரும் அதனை வற்புறுத்துவதுபோல, "தன்மையினால்அடியேனைத் தாம் ஆட்கொண்டநாள் சவைமுன், வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்"1[1]என்று உரைத்தருளுகின்றார். இவ்வரலாற்றில் மிக்க ஈடுபாடு கொண்ட பிற்காலச்சான்றோர் மக்கட்கும் இவ்வன்றொண்டன் என்ற பெயரையிட்டுச் சிறப்பித்தனர். திருத்துறைப்பூண்டி2[2] யிலுள்ள இறைவனுக்கு மூன்றாம் இராசராசன் காலத்தில் அவ்வூரில் வாழ்ந்த வன்றொண்ட முதலியார் என்ற சான்றோர் நிலம் விட்ட செய்தியை அவ்வூர்க்கல் வெட்டொன்று கூறுவதுகாண்க. பிறிதோரிடத்தில் நம்பியாரூரர் தம்மை வன்றொண்டன் என்று குறிப்பதோடு 3[3] நில்லாமல் '"அணுக்க வன்றொண்டன்4"[4] என்றும் எடுத்துரைத்தார். அதனைக் கண்டோரும், மக்களை அப்பெயரிட்டு வழங்கினர். வீரனாமூர் என்னுமிடத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்கு அணுக்க வன்றொண்டன் என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் நிலம் விட்டனர்' என்று கல்வெட்டுக்5 [5]கூறுகிறது. இனி, இவ்வாறு இறைவனுக்கு ஆளாகப் பெறும் சிறப்பினால் இவரைச் சான்றோர் ஆளுடையநம்பியென வழங்கிப் பரவியதுண்டு. அரசியற் குறிப்புக்களாகிய கல்வெட்டுக் களும் இப்பெயரை மகிழ்ந்தேற்று ஆளுடைய நம்பியென்று6 [6] வழங்குகின்றன. மேலும், அக்காலத்தே நம்பியாரூரது வரலாறு கூறும் புராணம், "ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம்" எனவும் வழங்கியிருக்கிறது. திருவொற்றியூரில் பங்குனி உத்திர விழாவில் இறைவனை மகிழமரத்தின் கீழ் எழுந்தருள்வித்து நாடாளும் வேந்தரும், கற்று வல்ல சான்றோர்களும் கூடியிருந்து அந்த ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணத்தை ஓதி விழாக்கொண்டாடுவர் என்றும் அவ்- ______________________________ 1. சுந். தே. 17:2. 2. A. R. No. 478 of 1912. 3. ஷ 17:11. 4. சுந். தே. 70:10. 5.A.R.No.524 of1937-8. 6.A. R. No. 309 of 1907;S.l. l . vol. VII. No. 485.

SlV16


  1. சுந்.தே.17:2
  2. A.R.No 478.of 1912
  3. சுந்.தே.17:11
  4. சுந்.தே.70:10
  5. A.R.No524of1937-8
  6. A.R.No309of1907 S.I.I Vol.VII No 485