பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243

நம்பியாரூரர்

 நம்பியாரூரர் திருவாரூர்க்குச் செல்லுங்கால் திருத்துறையூரை அடைந்து இறைவனை வழிபட்டுத் தமக்குத் தவநெறி யருளுமாறு வேண்டினர் என்பது வரலாறு ' "துறையூர் அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே"1என நம்பியாரூரரே தமது திருப்பதிகத்தில் குறித்தருளுகின்றர். அது குறித்து அவரைப் பிற்காலச் சான்றோர் "தவநெறிச் சுந்தரர்"2 எனச் சிறப்பித்துப் பேணினர். நம்பியாரூரர் திருவாரூர் இறைவனைத் தமக்குத் தோழனா கக்கொண்டு திருப்பதிகம் பாடிப் பரவிவரும் நாளில் அவருக்குத் தம்பிரான் தோழர் என்ற சிறப்பு எய்திற்றென அவரது வரலாறு கூறுகிறது. சேக்கிழாரும், அச் சிறப்பை, "அன்று முதல் அடியார்களெல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார்"3 என்றும், "இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடும் ஒருவர் தாம் எதிர் நின்று ஆண்ட சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றார்"4' என்று விதந்தோதுகின்றார், நம்பியாரூரரும் இத்தொடர்க் கருத்தை ஒரு திருப்பதிகத்தில், "தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனே"5 என்று குறித்தருளுகின்றார். இவ்வாறு வரலாற்றாலும் திருப்பதிகத் தாலும் வற்புறுத்தப் பெறுதலால் இப்பெயர் நலத்தைப் பிற்காலத்து அறிஞர்கள் நன்குணர்ந்து வியந்து மக்கட் கிட்டு மாண்புற்றனர். ஏழிசை மோகன் மூவேந்தரையனை தம்பிரான் தோழன்6' என்றும், கலியன் சேந்தனை தம்பிரான் தோழன்7 என்றும் செல்வர் பலர் இப்பெயர் தாங்கியிருந்தமை கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. திரு முட்டத்தில் திருப்பதிகம் பாடும் திருப்பணியை மேற் கொண்டு, தம்பிரான் தோழனான மானக்கஞ்சாறன் என்ற ஒருவர் வாழ்ந்திருந்தாரென அவ்வூர்க் கல்வெட்டொன்று8

______________________________

1  சுந். தே. 13 : 1-11.
2. S.I.I.Vol VIII.No 69. 
3  பெரியபு. தடுத்தாட். 129.
4. பெரியபு. தடுத்தாட். 171. 
5  சுந் தே. 68 : 8. 
6. A. R. No. 61 of 1922.
7  A. R. No. 273 of 1927-8, 
8. A. R. No. 255 of 1916.