பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245

நம்பியாரூரர்

வெட்டுகள் நங்கை பரவையார்[1] என்றும், பரவை நாச்சியார் என்றும் குறிக்கின்றன.

இனி, நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்களுள் திருத் தொண்டத்தொகை யென்பது மிகச் சிறந்ததொன்று : அஃது இல்லையாயின், சிவநெறிக்கண்நின்று சைவ சம யத்தின் மாண்பைத் தம் வாழ்வால் விளக்கஞ்செய்து காட்டிய நாயன்மார் பலருடைய வரலாறுகள் மறைந்தே போயிருக்கும் சைவசமயம் இன்றிருக்கும் நிலையையும் இழந்து மடிந்து போயிருக்கும். இதனை நன்கறிந்தே திருத் தொண்டர் வரலாற்றை விரித்துரைத்தசேக்கிழார், ஈசன் அடியார் பெருமையினை "எல்லாவுயிரும் தொழ எடுத்துத், தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்”[2]என்றும், "மாதவம் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப், போதுவான்"[3] என்றும் நம்பியாரூரை மிகவும் நயந்து பாராட்டிக் கூறுகின்றார். இச்சிறப்பை இடைக்காலச் சான் றோர் தெளிய உணர்ந்து நம்பியாரூரரைத் திருத்தொண் டத்தொகையான் என்றும் திருத்தொண்டத் தொகையார் என்றும் சிறப்பித்துப் பாராட்டிப் பரவினர். அதனல் நம்பியாரூரர் பிறந்த திருநாவலூரில் உள்ள சிவன் கோயிலுக்கே திருத்தொண்டீச்சுரம்'[4] என்று பெயரிட்டனர்; தில்லைப்பதியில் சிவகங்கையின் வடகரையில் நம்பியாரூரர் திருப்பெயரால் நிறுவப்பெற்ற கோயிலைத் திருத்தொண்டத் தொகையீச்சுரம்[5] என வழங்கினர். திரு வொற்றியூர்க் கோயிலில் திருத்தொண்டத் தொகையை ஒதுதற்கென்றே நிவந்தங்கள்[6]விடப்பட்டன. இத்திருத் தொண்டத் தொகையின் பெயரால் ஏற்பட்ட ஊர்களும் உண்டு ; அவை திருத்தொண்டத் தொகை மங்கலம்[7]எனப் பட்டன.


  1. S.I.I.Vol II partII No38.Ipid.p.66 S.I.I.Vol.V.No533.A.R.No345of 1916
  2. பெரிய.சண்டே.60
  3. பெரியபு.திருமலை25
  4. A.R.No325of1902
  5. A.R.No 262of1913
  6. A.R.No137of1912
  7. A.R.No54of1906