பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

சைவ இலக்கியவரலாறு


திருக்கண்டியூரில் இருந்தே நம்பியாரூரர் திருப்பதிகம் பாடவும் காவிரிப்பெருக்கு வழிவிட்ட நிகழ்ச்சி சேரமான் நெஞ்சில் நிலைபெற நின்றதனால், அதன் நினைவுக்குறியாக, சேரநாட்டில் திருக்கண்டியூர் எனப் பெயரியதோர் ஊரையுண்டாக்கி அங்கே அழகிய கோயிலையும் எடுத்துச் சிறப்பித்தார் என ஆராய்ச்சியாளர்1 கூறுகின்றனர்.

நம்பியாரூரர் பாடிய திருநொடித்தான் மலைத் திருப்பதிகத்தில் "வரமலி வாணன்வந்து வழிதந்து எனக்கு ஏறுவதோர், சிரமலியானே தந்தான் நொடித்தான்மலை யுத்த மனே"2 என்பதில் வாணன் என்றது. கேரளோற்பத்தி என்னும் நூலிற் காணப்படும் சேரமான் பெருமாள்கள் வரிசையில் ஐந்தாமவராகக் குறிக்கப்படும் பாணப்பெருமாளாகலாம் எனச் சிலர் கருதுகின்றனர். காலவகையாலும் திருப்பதிகப் பொருள் நிலையாலும் அவர் கருதுவது தவறு எனக் கூறுகின்றார் திரு. இராமநாதையர்.3 கழறிற்றறிவாரும் நம்பியாரூரரும் ஒருகாலத்தவர் என்பதை அவர்களுடைய வரலாறு தெளிவாகக் கூறுகிறது. இவர்கள் காலத்தை ஆராய்ந்த அறிஞர்கள் பலர் தமிழ் வரலாறு எழுதிய தஞ்சைத் திரு.K.S. சீனிவாசப்பிள்ளை யவர்களும் 4 திரு.A.S.இராமநாதையரவர்களும்5 திரு.C.V. நாராயண அய்யரவர்களும் 6 பின்வந்த டாக்டர் திரு.மீனாட்சியவர்களும்7 பிறரும் நம்பியாரூரர் கழறிற்றறிவார் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டாகும் என்றனர்; பல்லவர் வரலாறும் நம்பியாரூரர் அருளிய திருப்பதிகப் பொருணிலையும் ஒன்பதாம் நூற்றாண்டென்பார் கூற்றுக்கு ஆதரவு செய்யாமை கண்டு இவ்விருவருடைய காலம் கி. பி. எட்டாம் நூற்ருண்டேயாகும் எனத் திரு.-


1. T. A. S. Vol. V. p. 99.
2. சுந். தே. 100 : 8.
3. T. A. S. Vol. V. p. 103.
4. தமிழ் வரலாறு. Vol. 11. பக். 64.
5. T. A. S. Vol. V. p. 100.
6. Origin and Early History of Saivism in South India. p.445.
7.இந்நூல் பக்.206.