பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பெருமாள்

257


T. V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும் 1திரு. S. K. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்களும் 2திரு. மு. இராகவ அய்யங்கார் அவர்களும் 3 பிறரும் வற்புறுத்துகின்றனர்.

சேரமான் அருளிய நூல்களின் ஆராய்ச்சி'

சேரமான் அருளிய நூல்கள் மூன்றாகும்; அவை பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கயிலாய ஞானவுலா என்பன.

1.பொன் வண்ணத்தந்தாதி

சேரமான், திருவஞ்சைக் களத்தில் இருந்து சிவபரம் பொருட்குத் தொண்டுபுரியும் செயலில் ஈடுபட்டிருக்கின்றார்; உலகியல்பும் அரசியல்பும் ஆகிய இரண்டினும் இறைவற்குச் செய்யும் திருத்தொண்டின் இயல்பை நன்குணர்ந்து அதனையேபெரிதும் காதலிக்கின்றார். நாடோறும் "புலரி யெழுந்துபுனல் மூழ்கிப் புனிதவெண்ணீற்றினும் மூழ்கித்4 திருப்பாட்டு ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப் பணிந்து 5ஒழுகுகின்றார். அரசியலை ஏற்றல்வேண்டுமென அரசியற்சுற்றத்தார் வேண்டிக் கொள்ளுங்கால், அரசியற் பணி இறைபணிக்கு இடையூறாகும் என்று கருதுகின்றார்: இறைவனைப் பரவி அவன் நல்கிய அருளறிவான் கழறிற்றறிவாராகி அரசுமுறை யேற்கும் சேரமானுடைய மனப்பண்பு, சிவநெறிக்கண் வேரூன்றி ஆழ்ந்திருக்கும் அவரது மெய்யுணர்வுத் திட்பத்தை இனிது காட்டுகின்றது. தாம் பாடிய பொன் வண்ணத்தந்தாதியில் சேரமானும் தனது இக்கருத்தைத் ' "தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப் பெற்றால், மனக்கு என்றும் நெஞ்சிற்.


1. தமிழ்ப்பொழில்Vol.III P.209
2. Bullettin of theRamsVarma Research Institute.Vol.VII.p.37-44
3. சாசனத்தமிழ்க் கவிசரிதம்
4. பெரிய.கழறிற்.8.
5. பெரிய.கழறிற்.9

SIV–17