பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

சைவ இலக்கிய வரலாறு

 கடையா நினைவன்”[1] "நானிலம் ஆளினும், நான்மறை சேர்மையார் மிடற்றான் அடிமறவா வரம் வேண்டுவனே”[2] என்று தம் மனக்கோளை விளங்க உரைக்கின்றார்.

இனி, வண்ணைனைக் கும்பிட்ட வரலாற்றில், சேரமான் தன் அடியில் வீழ்ந்து வணங்கக்கண்டு பேரச்சத்தால் நடுக்குற்று நின்று உண்மை கூறிய வண்ணானை நோக்கி, திருநீற்றின் வாரவேடம் நினைப்பித்தீர்”[3] எனச் சேரமான் கூறுவதும் பிறவும் சிவவேடத்தின் பால் அவர்க்கு இருந்த திண்ணிய அன்பு புலனாகிறது; அதனை அத் திருவந்தாதி,

“வருகின்ற முப்பொடு திப்பணிக் கூற்றம்

 வைகற்கு வைகல்

பொருகின்ற போர்க்கு ஒன்றும் ஆற்றகில்லேன்

 பொடியூசி வந்து உன்

அருகு ஒன்றி நிற்க அருளுகண்டாய்”[4]

என்பதனால் வற்புறுத்துகின்றது.

சேரமான் அரசுகட்டிலேறி ஆட்சி புரிந்து வருகையில் நாடோறும் வழிபாட்டிறுதியில் இறைவனது சிலம்போசை கேட்குமாற்றால் அதன்பால் பேரார்வம் உற்றிருந்த செய்தி வரலாற்றால் அறிவது, அதனே. அவரது திருவந்தாதி, “நெஞ்சமே, எரியாடி எம்மான், கடல் தாயின நஞ்சம் உண்டபிரான் கழல் சேர்தல் கண்டாய், உடல்தான் உள பயனாவ சொன்னேன் இவ்வுலகினுள்ளே” [5] என்றும், "முருகலர் கொன்றையினாய் என்னை மூப்பொழித்த கனியே, கழலடியல்லால் களை கண்மற்று ஒன்றுமில்லேன்”[6] என்றும் எடுத்துக் காட்டுகின்றது. .

சிவவழிபாடு புரிந்துவரும் தமக்கு இறைவன், செங்கோல் அரசுதந்து நாளும் திருவடிச் சிலம்போசைகாட்டி அருள் செய்வது, தாம் தம் திருத்தொண்டில் வழுவாதிருத்தற்கே என்பது சேரமான் திருவுள்ளத்தில் வீற்றிருந்த சீரிய


  1. பொன் வண்ணத். 43.
  2. பொன் வண்ணத். 98.
  3. பெரிய பு. கழறிற். 19.
  4. பொன் வண்ணத். 21.
  5. பொன் வண்ணத். 13.
  6. பொன் வண்ணத். 40.