பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பெருமாள்

259

கருத்து. மதுரையிலிருந்து போந்த பாணபத்திரன் காட்டிய திருமுகத்தைக்கண்டதும், தாம் மேற்கொண்டு அரசு செய்யும் அரசியற் செல்வம் இறைவன் தந்தது என்று எண்ணியிருந்தமையின், அச்செல்வமுழுதையும் பாணற்கு அளிக்கின்ருர்: பாணபத்திரர் அமைதியோடு அடி பணிந்து, “அரசே, அரசுகோடற்கு ஆணேயில்லே” [1] என்று இசைக்கின்ருர்; சேரமானும், உடனே, தான் அரசேற்றது இறைவின் திருவருட் குறிப்புக்கொண்டே யாதலின், அதனைப் பிறர்க்கு நல்குவதும் அத்திருவருட் குறிப்பின்றிக் கூடாது; நல்குவது நன்றன்று என நினைந்து அஞ்சுகின்றார், அதனை நன்குதெளிய, “இறைவர் ஆணைமறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல்வேந்தர்”[2] என்று சேக்கிழார், சேரமான் மனநிலையை நாம் அறியக் காட்டுகின்ருர். இவ் வகையில் சேரமான் உள்ளத்தே ஒருவகைத் தெளிவு பிறக்கின்றது. தன்னே நினைந்து வழிபடுவார்க்கு இறைவன் வேண்டுவன் தந்தும் உணருவன உணர்த்தியும் வழுவா வாறு திருத்திப் பணி கொள்கின்ருன் என அவர் தெளி கின்ருர், பிஞ்ஞகனர் ஆணேயென்ற பாணபத்திரன் விடை, அரசுநல்கிய இறைவன் அதனைப் பிறர்க்குக் கொடுத்து விட ஆணையிடவில்லே' என்று சேரமானத் தெருட்டுகிறது; அவரும் தெளிந்து அமைகின்ருர்; இதனைக் குறிப்பாகத் தாம் பாடிய திருவந்தாதியில், “நாமே அருள் செய்து கொள்வர்தம் பல்பணியே”[3] என்றும், “புண்ணிய குலத்து எம்மான் திருந்தியபோது அவன் தானே களையும் நம் திவினையே"[4] என்றும் தெரிவிக்கின்ருர்.

நம்பியாரூரரைக் காணும்பொருட்டுச் சோழநாடுபோந்த சேரமான், நம்பியாரூரர் தில்லையில் இறைவன் திருமுன் நின்று அவன் திருவருளில் இரண்டறத் தோய்ந்து பாடியதும், திருக்கூத்தியற்றும் இறைவன் அவர்பாட்டில் கலந்து நின்று சிலம்போசை செய்யா தொழிந்ததும் பலபட நினைந்து தில்லைக்கூத்தன் திருமுன்னர் கின்று திருவருளில்


  1. பெரிய பு. கழறிற். 36.
  2. பெரிய பு. கழறிற். 37.
  3. பொன் வண். 9.
  4. பொன் வண். 9.