பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான்பெரமாள்

263

உடல் வாழ்வு

உடலோடு கூடி இவ்வுலகில் வாழும் வாழ்வு நிலையில்லாதது; இவ்வாழ்வில் இன்பம் குறித்து ஈட்டப்படும் பொருளும், நுகரப்படும் இன்பமும் நிலையின்றிக் கெடுவன என்பது முதலிய கருத்துக்கள் இப் பகுதிக்கண் குறிக்கப் படுகின்றன. இவ்வகையில் நம் சேரமான் ஏனைச் சமய ஆசிரியர்களைப் போலவே நிலையாமைகளைக் கூறியமைகின்றார் ஆயினும் உடலோடு கூடிவாழும் வாழ்வு நீடித்தலின்றி நாடோறும் பலவகையால் தேய்ந்து இறுவது என்பார்

வேண்டிய நாட்களில் பாதியும் கங்குல் மிக அவற்றுள்
ஈண்டிய வெந்நோய், முதலது பிள்ளைமை, மேலது மூப்பு ஆண்டின் அச்சம் வெகுளி அவா அழுக்காறு இங்ஙனே
மாண்டன : சேர்தும் வளர்புன் சடைமுக்கண்மாயனேயே" [1]

என்று கூறுகின்றார், ஏனையோர் "வேதநூற் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேனும்"[2] என வயதெல்லையை நூறாகக் கூற, இவர் அதனைக் குறியாது "வேண்டிய நாட்கள் " என்பது இவரது உலகியலுணர்வு மிகுதியை விளக்குகின்றது.

தொண்டின் இயல்புகூறல்

உடல் வாழ்வின் உயர்வின்மை உணர்ந்த வழி ஒருவர்க்கு இறைவன் திருவருளில் ஒன்றி நிற்கும் பெரு வாழ்வின்கண் ஆர்வமுண்டாகும். அதற்கு இறைவனை வழிபடுவதை யன்றிச் செயல் பிறிது இல்லை; தொண்டுபட்டு இறைவனை வழிபடுவதே செய்யத்தக்கது என்ற இவ்வுண்மையைச் சேரமான் தன் நெஞ்சை நோக்கி, "பணிபதம்,பாடு இசை ஆடு இசையாக, பனிமலரால் இறைவனை அணி, அத்தவற்கே அடிமை துணி, பதம் காமுறு, தோலொடு


  1. பொன்.வண்.99.
  2. திவ்யப்பிரபந்தம். திருமாலை.7