பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

சைவ இலக்கிய வரலாறு

நீறு உடல் தூர்த்து"[1] எனப் பணித்து வற்புறுத்துகின்றார், "நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முக மலர, அம் செங்கரதலம் கூம்ப அட்டாங்கம் அடிபணிந்து, தம் சொன்மலரால் அணியவல்லோர்"[2] எல்லா நலன்களும் எய்துவர். வழிபாடு என்பது தொழுதல், பணிதல், நினைதல், அருச்சித்தல் முதலிய கூறுகளைச் சிறப்பாகவுடையது. இக்கூறுகளைத் தனித்தனியாக எடுத்து மக்கட்கு அறிவுறுத்துவாராய், "உலகு ஆளுறுவீர்:தொழு மின் ; விண்ணாள்வீர் பணிமின் ; நித்தம் பல காமுறுவீர் நினைமின் பரமனொடு ஒன்றலுற்றீர் நல காமலரால் அருச்சிமின்"[3] என்று வினேயும் பயனுமாக விரித்து விளம்புகின்றார். உலகாளுதல் விண்ணாளுதல் பரமனொடு ஒன்றுதல் முதலிய பயன்களை நினையாது வாழ்வோர் நரகத் துன்பத்தை விரும்புபவர் என்பது தானே பெறப்படுதலால் அவர்களை நோக்கி, "நாள் நரகத்து நிற்கும் அலகா முறுவீர் அரன் அடியாரை அலைமின்கள்" என்று அறைகின்றார்,

பரமனது அருமை கூறல்

இவ்வண்ணம் தொண்டு புரிந்த வழி அதனை ஏற்றருளுதலில் முன்னிற்பவன் பரமன் , அன்பர் பரவி ஏத்தும் ஏத்துக்களேயே இறைவன் மிகவும் விரும்புகின்றான்[4] அவர் தம் கண்ணிலும் கருத்திலும் எப்போதும் நிலவுகின்றான்[5] என்பர். இவ்வாறு கூறவே இறைவன் மிக்க எளியனாய்க் காணப்பெறுவன் போலும் என்று எழும் நினைவை மாற்றுவாராய், "திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும், அரிது அவர் தன்மை அறிவிப்பது"[6] என அறிவிப்பர். அவ்வருமை கருதி நாம் மலையாமைப் பொருட்டு, நிலம் நீர் முதலிய யாவும் அவன் வடிவம் : அவற்றின் நலங்கண்டு பரவுமாற்றால் அவனை அறியலாம்.


  1. பொன் வண், 10.
  2. பொன் வண். 11.
  3. ௸ 14.
  4. ௸ 7.
  5. ௸ 9
  6. ௸ 9.