பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:270

 கின்றான், அவளும் அவன் தெளித்த சொல்லைத் தேறி யிருக்கின்றாள். ஆயினும், பிரிவுத் துன்பம் அவளை வருத் தாதொழியவில்லை; அவள் வருந்துவதும் தோழி தேற்றத் தேறுவதுமாக இருந்து வருகின்றாள். தலைவன் குறித்த கார்ப்பருவம் வருகிறது ; அவன் வருகின்றானில்லை. மேற் கொண்ட வினை முடியாமையால் அவன் வரவு தாழ்க்கின்றது. இந்நிலையில், கார்வரவு கண்ட தோழி தலைமகள் ஆற்றாளாவள் என எண்ணி, -

"கண்ணார் நுதல் எந்தை காமருகண்டம் என இருண்ட விண்ணால் உருமொடு மேலது கீழது கொண்டல், விண்ட மண்ணார் மலைமேல் இளமயிலால் மடமான் அனைய பெண்ணாம் இவள் இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே'1[1]என்று சொல்லி வருந்துகின்றாள். பின்பு சின்னாட்களில் தலைமகன் போந்து கூடி இன்புறுத்துகின்றான். அவன் மறுபடியும் பரத்தையிற் பிரிந்தொழுகுகின்றான். அத்தகையோன் ஒருநாள் தன் மனைக்கு வந்தபோது அவனது பரத்தைமை காரணமாகத் தோழி முதலியோர் வாயில் மறுக்கின்றனர். அவன் தன் ஆற்றாமையே வாயிலாக வந்து அடைகின்றன். அடைந்தவன் தலைவியைத் தீண்டினானாக, அவள் புலந்து, " பொய்யார் தொழலும் அருளும் இறை கண்டம் போல் இருண்ட மையார் தடங்கண் மடந்தையர் கேட்கின் பொல்லாது ; வந்து உன்கையால் அடி தொடல், செல்க எற்புல்லல், கலை அலையல், ஐயா, இவை நன்கு கற்றாய் பெரிதும் அழகியவே ”2[2] என்று உரைக் கின்றாள். பரத்தையரை உயர்த்துக் கூறும் கூற்றால் அவர்களைப், "பொய்யார் தொழலும் அருளும் இறைகண்டம் போல் இருண்ட மையார் தடங்கண் மடந்தையர்" என்று கூறுகின்றாள். "பொய்யன்பே கொண்டு பரவினும் இறைவன் அருள் மண்ணுவது போல, நீ பொய்யே ஒழுகினும் அப் பெண்டிர் நின்னை ஏற்பர் : யாம் ஏலேம் : அவர் பாலே

1. திரு. மும்ம. 3. 2. yெ. 21.


  1. திரு.மும்ம.3.
  2. திரு.மும்.21