பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:274

 "ஆய விழுப் போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் தந்த பதம் போற்றி-தூய மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றி தாள் போற்றி நிலைபோற்றி"1[1] எனப் போற்றிப் பூமாரி பொழிகின்றனர். பெருமான் உலாவருகின்றான் தெருவில் பேதைமுதல் பேரிளம்பெண் ஈறாகப் பல்வகை மகளிரும் தம்மைச் செவ்வே புனைந்து கொண்டு இறைவனைத் தம் கண்ணாரக்கண்டு காமக்குறிப் பால் கருத்தழிகின்றனர். அவருள், பேதைப் பருவம் பிழையாதாள், நன்றாகத், "தாலி கழுத்தணிந்து சந்தனத் தால் மெய்பூசி, நீல அறுவை விரித்துடுத்துப்" புனையப் பெற்ற பந்தரில் பாவையொன்றை வைத்து விளையாடுகின்றாள்; அவளை நோக்கி, ' இப் பாவைக்குத் தந்தையார்” என்று ஒருத்தி வினவ, "இதற்குத் தந்தை ஈசன்,

எரிபாடி"2 [2]என்றுஇசைக்கின்றாள். இப்பெற்றியாள் இறைவன் உலா வரக்கண்டதும் தன் பருவத்துக்கேலாத காமக் குறிப்பை எய்துகின்றாள். பெதும்பைப்பருவத்தாள் ஒருத்தி தோழியருடன் கூடி மணலில் காமனுடைய உருவம் எழுதி

விளையாடிக்கொண்டிருக்கிறாள்: அவ் வுருவில் காமன். வடிவத்தை முடித்துக் கரும்பு வில்லும் மலரம்பும் தேரும் எழுதுங்கால் திருவுலாவரும் இறைவன் அவள் மனையருகே வந்து விடுகின்றான்; அவனை அவள் காண்கின்றாள். - __ தாமரை, நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று நின்றறிவு தோற்று நிறை தோற்று-நன்றாகக் கைவண்டும் கண்வண்டும் ஒடக் கலைஒட நெய்விண்ட பூங்குழலாள். நின்று '3[3] அயர்ந்தொழிகின்றாள். ஒருபால், மங்கைப்பருவமுடையா ளொருத்தி தான் பொற்கூட்டில் வைத்துவளர்க்கும் பூவைப் புள்ளொடு பேசி அது சொல்லும் சொல்கேட்டு மகிழ்ந்து

1. ஞான வுலா, 5.1 : 5. 2. 6 83. 3. ങ്ങ്. , 98 : 9.


  1. ஞான உலா .51:5
  2. ஞான உலா.83
  3. ஞான உலா98:9