பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275

சேரமான்பெருமாள்

 கொண்டிருக்கையில் தெருவில் திருவுலாவரும் இறைவனுடைய சடைமுடி அவட்குக் காட்சியளித்தது. அக்காட்சியில் உள்ளம் கசிந்து கருத்திழந்து அவ்விறைவனது

"தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய ஏர்நோக்கும் தன்ன தெழில் நோக்கும்-பேரருளான் தோள் நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின் நீணோக்கம்வைத்துநெடிதுயிர்த்து-காணோக்காது உள்ளம், உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடைஅழுந்திவெய்துயிர்த்தாள்"1

[1] பிறிதொருபால் மடந்தை யொருத்தி இறைவன் அழகில் ஈடுபடுகின்றாள் அவளைத் தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்திய சீர் வாய்ந்த மடந்தைப்பிராயத்தாள்' என்று நம் பெருமாக்கோதையார் சிறப்பித்துப் பேசுகின்றார். இறைவன் வரும்போது இவள் தன் தோழியருடன் யாழிசைத்து இறைவன் மடல்வண்ணம் பாடி மகிழ்கின்றாள். இறைவனைக் கண்டதும் அவளது எண்ணம் அவன் பால் சென்று இயைகிறது; அதனால், 'தன்னுருவம் பூங் கொன்றைத் தார்கொள்ளத் தான் கொன்றைப் பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள்.”2[2] மற்றோரிடத்தே அரிவை யொருத்தி வீணை பண்ணிப் பரமன்பால் தமிழ் பாடத் தொடங்குகின்றாள் : அப்போது இறைவன் விடைமேல் தோன்றி காட்சி நல்குகின்றான் , அவளது கருத்து அழிகின்றது. தன் தோழியரை நோக்கி, பொன்னனையீர், இன்றன்றே காண்பது எழில்நலம், கொள்ளேனேல், நன்றன்றே பெண்மை நமக்கு"3[3] என மொழிந்து கொண்டு பெருவேட்கை எய்துகின்றாள் மேனி மெலிகின்றது; வளைநெகிழ்ந்து ஓடுகிறது; உடையும் சோர்கிறது; அதனால், "அங்கைவளை தொழுது காத்தாள் கலைகா வாள், நங்கை யிவளும் நலம்தோற்றாள்." 4.<ref> ஞான உலா.148</ref&வேறோர் அரிவை தன் ஆயமகளிருடன் கவறாடிக்கொண்டிருந்தவள், திரு

1. ஞான வு லா. 109: 11. 2. இான வுலா. 132. 3. ஷை 144. 4. . * 62 148.


  1. ஞான உலா109:11
  2. ஞான உலா.132
  3. 'ஞ உலா144