பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:276


உலாவரும் சிவபெருமான் சடைமுடி தோன்றக்கண்டு காதல் வேட்கை பெருகலுற்றாள். அவள், "தேவாதி தேவன் சிவனாயின் தேன் கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது போவானேல் கண்டால் அறிவன் எனச் சொல்லிக் கைசோர்ந்து வண்டார் பூங்கோதை வளங்தோற்றாள்."1

[1]

இறுதியாகப் பேரிளம் பெண்ணுெருத்தி உலாவரும் இறைவனைக் காண்கின்றாள். அவளைப்பற்றிக் கூறும் சேரமான், "பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் - பண்ணமரும் இன் சொல் பணிமொழியாள்-மண்ணின்மேல்,' கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள என்ற பண்டையோர் கட்டுரையை மேம்படுத்தாள்" '2[2] என்று பாராட்டுகின்றார் தோழியரும் பணிப்பெண்களும் தன்னைச் சூழ இருந்து செய்வனசெய்து சிறப்பிக்க, கண்ணிவனை யல்லாது காணா செவியவனது எண்ணருஞ்சீர் அல்லது இசைகேளா-அண்ணல் கழலடி யல்லது கைதொழா அஃதான்று அழலங்கைக் கொண்டான் மாட்டன்பு"3 [3] என்றோர் வெண்பாவை விரித்துரைக்கின்றாள். அப்போது இறைவன் தேவர்குழாம் தற்குழ மாடமறுகில் திருவுலா, வருகின்றான். அவனைக் காணும் இவளும் வேட்கை மீதூர மனம் கரைந்து மெய்வெளுத்துப் பெருமயக்கம் உறுகின்றாள். இவ்வாறு இறைவன் திருவுலாப் போந்த தெருக்களில் பெண்களின் ஆரவாரம் பெரிதாயிற்று என்பார்,

" பண்ணாரும் இன் சொற்பணைப்பெருந்தோள் செந்துவர் வாய்ப் பெண்ணாரவாரம்பெரிதன்றே__

விண்ணோங்கி

.


  1. ஞான உலா.170:1
  2. ஞான உலா172:4
  3. ஞான உலா.188:9