பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277

சேரமான்பெருமாள்

 மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு '1[1] என்று சேரமான் வியந்தோதுகின் றார்,

இனி, இவ்வுலாவிற் கூறப்படும் கருத்துக்கள் சில அந்தாதியிலும் மும்மணிக்கோவையிலும் விரித்துக் கூறப்படுகின்றன. பேரிளம் பெண்பாடிய வெண்பாவே, பொன் வண்ணத் திருவந்தாதியில், - "சொல்லாதன கொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண் திணிந்த கல்லாம் நினையாமனம் வணங்காத் தலையும் பொறையாம் - அல்லா அவயவந்தானும் மனிதர்க்கு அசேதனமே"2 [2] என்பது இதற்குப் போதிய சான்று பகருகின்றது. ஒப்பு நோக்குவோர் இவ்வாறு பல இருப்பது காண்பர். இங்கிதமாகப் பாடுவதில் சேரமான், தன் தோழரான நம்பியாரூரர் போல் சிறந்தவர். இறைவன் கங்கையைச் சடையில் கொண்டிருத்தல் கண்டும் உமை நங்கையார் அக் கங்கையின் கீழ் உறைவிடம் பெற்றிருப்பது தகவோ என்ற கருத்துப்பட,

'" இமையோர் கொணர்ந்து இங்கு இழித்திட நீர்மை கெட்டு ஏந்தல் பின்போய் அமையா நெறிச்சென்று ஒர் ஆழ்ந்த சலமகளாய் அணைந்தே எமையாளுடையான் தலைமகளாய்3பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag

. .


  1. ஞான உலா.196:7
  2. பொன் அந்.42