பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:280


மிகு பன்மொழி கீதம்1"[1] என்ற பாட்டின் கருத்தை மேற் கொண்டிருப்பதைத் தெளியக் காணலாம். இவ்வாறே, சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்க தேவர், சேரமான் அருளிய நூல்களிலிருந்து சில கருத்துக்களை வாங்கித் தம் காவியத்தின்கண் மேற்கொண்டுள்ளார். மகளுற்ற வேறு பாடு கண்டு ஆற்றாத நற்றாய் தலைவனைக் கழறல் என்ற கருத்தில், "அடிக்கண்ணி கைதொழுவார்க்கு அகன் ஞாலம் கொடுத்தடி நாய் வடிக்கண்ணி நின்னேத் தொழவளே கொண்டனே" வண்டுண் கொன்றைக் கடிக்கண்ணியாய் எமக்கு ஒர்ஊர் இரண்டகம் காட்டினையால் கொடிக்கண்ணிமேல் நல்ல கொல்லேறுஉயர்த்த குணக்குன்றமே"2[2] என்று சேரமான் பாடியுள்ளார். இப்பாட்டின்கட் காணப்படும் "ஒரூர் இரண்டகம் காட்டினே" என்ற கருத்தைச் சீவக சிந்தாமணியில் திருத்தக்கதேவர், சுரமஞ்சரி. சீவகனைப் புலந்து கூறும் கூற்றில் வைத்து,

"கிழவனாய்ப்பாடிவந்து என் கீழ்ச் சிறையிருப்பக் கண்டேன் எழுதியபாவை நோக்கி யிமையவித்திருப்பக் கண்டேன் ஒழிக.விக்காமம் ஒரூர் இரண்டஃகமாயிற்றுஎன்று ஆங்கு, அழுத கண்ணீர்கள் மைந்தன் ஆவிபோழ்ந் திட்டவன்றே" '3[3] என்று அமைத்துக் கொண்டுள்ளார். இம்மட்டோ, "இல்லாரை யெல்லாரும் எள்ளுவர் செல்வரை, எல்லாரும்செய்வர் சிறப்பு" <ref'>குறள் 752"</ref>'4 என்ற திருக்குறளை மகளிர் ஒப்பனைக் கண் வைத்து நயப்படுத்தும் செயல் முதற்கண் நம் சேரமான்.

. .


  1. 'பொன் அந்.19
  2. பொன் அந்.73
  3. சீவகசிந்.2087