பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:286



"விற்கைத் தடக்கை விறல் 
வேந்தன்
கொற்கை கிழான் காமக்காணி 
நற்சிங்கற்குத்
தேரோடுங் கடற்றானையான் 
நீரோடு அட்டிக்கொடுத்தான்1[1]

எனவரும் இப்பகுதி சங்க கால நெடும்பாட்டை நன்கு நினைப்பித்தலைக் காணலாம். ஏதிை சாத்தஞ் சாத்தனார் கொழுவிய மொழிவளமும் தாவடியிட்டுச் செல்லும் பெருமித நடையும் உடையவர் என, அவர் தன் காலத்து வேந்தனான நெடுஞ் சடையன் சிறப்பை மொழியும், " மற்றவற்கு மகனாகி மாலுருவின் வெளிப்பட்டு மூன்றுகொற்ற முரசுடனியம்பக் குளிர்வெண்குடை மண்காப்பப் பூமகளும் புலமகளும் நாமகளும் நலன் ஏத்தக்கலியரசன் வலிதளரப் பொலிவினெடு வீற்றிருந்து கருங்கடல் உடுத்த பெருங்கண் ஞாலத்து காற்பெரும் படையும்பாற்படப்பரப்பிக்கருதாதுவந்து எதிர்மலைந்த காடவனைக் காடுஅடையப் பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் தென்கரைமேல் தண்ணுக மலர்ச் சோலைப் பெண்ணாகடத்து அமர்வென்றும் தீவாய அயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த ஆய்வேளையும் குறும்பரையும் அடலமருள் அழித்தோட்டிக் காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குறும்பிற் செரு வென்றும், அறைகடல் வளாகம் ஒருமொழிக் கொளீ இய சிலைமலி தடக்கைத் தென்னவன் வானவன் '2[2] என்ற பகுதி நன்கு காட்டுகிறது. மேலும், இச் சாத்தனர் வடமொழியிலும் சிறந்த பயிற்சி யுடையரென்பதை, - சிரீவரன் சிரீ மனோகரன் சினச் சோழியன், புனப்பூழியன், வீதகன்மஷன் ,விநயவிச்ருதன் விக்ரமபாரகன் வீர (புரோகன் மருத்பலன் மான்யசாசனன் மனு பமன் மர்த்திதவீரன்

-


{}reflist}}

  1. EP.Indi XVII.VOL.No.16 .Guf.வரி 104-118'
  2. Ep.Indi.Vol.XVII.No16 வரி88-97