பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

சைவ இலக்கிய வரலாறு


தந்தார். வேந்தன் அக்குதிரை வாணிகனுக்குச் செய்ய வேண்டிய சிறப்புக்களைச் செய்து, தான். ஆராயாதுசெய்த தண்டத்துக்கு வருந்தித் தன்னேப் பொறுத்தருளுமாறு திருவாதவூரரை வேண்டிக்கொண்டு தன் அரண்மனை அடைந்தான். அன்றிரவு, புதியவாய் வந்த பரிகள் நரிகளாக மாறின; இருந்த குதிரைகள் அந்நரிகளாற்கடியுண்டு இறந்தொழிந்தன. வேந்தன் பெருஞ் சினம்கொண்டு வாதவூரரை மீட்டும் சிறையிலிட்டுத் துன்புறுத்தினன்.

அன்றிரவே வையையாறு பெருக்கு மேலிட்டு நகர்க்குட் புகுந்து இன்னல் விளைத்தது ; வேந்தன் வாதவூரரை வருவித்துத் தான் அவர்க்குச் செய்த துன்பத்துக்காக வருந்தி வழிபட்டான். திருவாதவூரர் அவன் பொருட்டுச் சிவ பரம் பொருளே வணங்கிப் பரவினர். ஆற்றுப் பெருக்கின் கடுமை சிறிதுதணிந்தது. அரசியல்தலைவர்கள் ஆற்றுக்கு அணையிடுமாறு ஊரவர்க்குக் கட்டளையிட்டனர். ஊர் மக்கள் தத்தமக்கெனப் பங்கிட்டுக் கொண்டு அணையிடத் தலைப்பட்டனர். இயன்றவர்கள் தாமே மண்ணெடுத்து வேலைசெய்தனர். இயலாதவர்கள் தமக்காகக் கூலியாட்களைக்கொண்டு செய்தனர். அக்காலையில், அந்நகரில் பிட்டு வாணிகம் செய்யும் முதியவள் ஒருத்தி தனக்கு உரிய பங்குக்கு ஆள் கிடைக்காமல் வருந்தி இறைவனை வேண்டினுள். இறைவனே கூலியாளாக உருத்தாங்கி வந்து, அவள் தந்த பிட்டையே கூலியாகப்பெற்று, அணையில் வேலைசெய்யலுற்றார் பிட்டு வாணிச்சி சிறிது அகன்றதும், அவர் ஒரு கொன்றை மர நீழலில் உறங்குவார் போலக்கிடந்தார். முதியவள் ப்ங்கு அடையாமை கண்டவர் வேந்தன்பால் முறையிட, அவன் மிக்க சினம்கொண்டு கையில் ஒரு கோலை யேந்திக் கொண்டு அவ்விடத்துக்கு வந்து கூ லி யா கி ய சிவபெருமான ஓங்கிப்புடைத்தான் : அப்பெருமான் எல்லாப் பொருளிலும் உள்ளும் புறமும் ஒன்றியிருப்பவராதலால், அந்த அடி வேந்தனுட்பட எல்லார்மேலும் பட்டது; எல்லாரும் அடி பொறுக்கமாட்டாது. துடித்து வருந்தித் திடுக்கிட்டு வியந்து "இஃது, இறைவன், திருவாதவூரர் பொருட்டுச் செய்த திருவிளையாட்டு என