பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

293


எண்ணிப்பரவினர். வேந்தனும் தெளிந்து திருவாதவூரர் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். திருவாதவூரர் திருவருள் நலம் நிறையப் பெற்ற திருத்தொண்டர் எனத் தேர்ந்து மனம் ஒடுங்கினான்.

பின்னர்த் திருவாதவூரர் பாண்டியனுக்குரிய அமைச்சர் என்னும் கடமையின் நீங்கி, அவன்பால் விடைபெற்றுக்கொண்டு, திருப்பெருந்துறையை அடைந்து, தமக்கு ஞானம் அருளிய ஞானசிரியனே வ்ழிபட்டுச் "சின்னாள் அங்கேயே தங்கியிருந்தார். பின்னர், திருவிடைமருதூர், திருவாரூர், சீர்காழி முதலிய பதிகளுக்குச் சென்று திருப்பதிகம்பாடி ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் திருக்கோயிலை வழிபட்டார். பின்பு, அவர் திருமுதுகுன்றம் திருவெண்ணெய் நல்லூர், திருவண்ணாமலை, கச்சித் திரு வேகம்பம், கழுக்குன்றம் முதலிய திருப்பதிகளில் இறைவனைப் பாடிப் பரவிக்கொண்டு, தில்லைக்குவந்து சேர்ந்து அங்கே தங்கினார். அப்போதுதான், புத்தரை வாதில் வெல்லும் முகத்தால், ஈழவேந்தன் மகள், பிறவிமுதல் ஊமையாயிருந்த பெண்ணொருத்தியைப் பேசுமாறு திருச் சாழல் என்னும் திருப்பதிகத்தைப் பாடினர்.

ஒருகால் அந்தணர் ஒருவர் வந்து திருவாதவூரரைப் பணிந்து, அவர் பாடிய திருவாசகத்தைத் தான் எழுதிக் கொள்ளும் விருப்புடையராதலைத் தெரிவித்தார். திருவாதவூரரும் அதற்கு இசைந்து முறையே சொல்லிவர, அந்தணரும் எழுதிக்கொண்டார். முடிவில் அவர், 'பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக” என வேண்டினர். அவரும் அதை விரும்பித் திருக்கோவையாரைப் பாடியருளினர். அதனே எழுதி முடித்த அந்தணர் அதன் இறுதியில், "திருவாதவூரன் சொல்ல எழுதினேன் திருச்சிற்றம்பலமுடையானேன்; இவை என் கையெழுத்து ' என்று கையெழுத்திட்டு எடுத்துச் சென்று தில்லையம்பலத்துப் படியின்மீது வைத்துவிட்டு மறைந்தார். .

மறுநாள், படிமீது கையெழுத்துச் சுவடியிருக்கக் கண்டனர் தில்லை அந்தனர்; அதனை ஊரவர்க்குச்சொல்ல, அவர் கள்திருவாதவூரரைப் பணிந்து " அதனை ஓதி உரை விரித்