பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:296

 கோயிலுக்குள் குருந்தமரத்தின் நீழலில் இருந்த ஞான குருவைக்கண்டார் எனவும் திருவாலவாயுடையார் திரு விளையாடல் கூறுகிறது. குருந்த மரத்தின்கீழ் அந்த ஞானாசிரியர் தொளாயிரத்துத் தொண்ணுாற் றொன்பது மானக் கருடன் இருந்தார் எனத் திருவுத்தரகோசமங்கைப் புராணம் தெரிவிக்கின்றது. ஞானசிரியர் கையிலிருந்த நூல் சிவஞான போதம் என்று திருவாதவூரர் புராணம் கூறத் திருவாலவாயுடையார் திருவிளையாடல்அதனை இன்னதெனக்கூறவேயில்லை. இங்நிகழ்ச்சியை ஆராய்ந்த திரு. மறைமலையடிகள், 'இனி அருணந்திசிவனார்க்கும் அவர்தம் ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனர்க்கும் முற்பட்ட காலத்தே, (திருவாலவாய் உடையார்) திருவிளையாடலியற்றிய பெரும்பற்றப்புலியூர் நம்பி இருந்தார் என்பது அதன் பதிப்பாசிரியர் 1[1]அவரது காலம் ஆராய்ந்துரைத்த பகுதியால் 2[2]நன்கு விளங்கா நிற்கின்றது. சிவஞானபோத நூல் அருளிச்செய்த மெய் கண்டதேவநாயனர் காலத்திற்குப் பின்வந்தவரான கடவுண்மாமுனிவர் அச்சிவஞானபோதம் குருந்தமர நீழலில் எழுந்தருளிய ஆசிரியன் திருக்கையில் இருந்தது எனக் கூறுதலும், மெய்கண்டதேவர் காலத்துக்கு 3<ref>The dateof maikandar has beenfixedtobe about A.D.1232 A.R.for1935-36para86செந்தமிழ்.Vol.IIIPp89-90முற்பட்ட பெரும்பற்றப்புலியூர் நம்பி சிவஞானபோத நூலேயாதல், அந்நூலிற் போந்த பொருளேயாதல் அம்மெய்க்குரவன் அடிகட்கு (திருவாதவூரருக்கு) அறிவுறுத்தருளினர் என்று சிறிதாயினும் கூறாமையும் என்னென்று புடை படவைத்து ஆராய்ந்து உணர்வார்க்குக் கடவுண்மா முனிவர் ஈண்டுக் கூறிய இவ்வரலாறு உண்மையன்று என்பதூஉம், அஃது அவரே கட்டிச்சொன்னதா மென்பதூஉம் நன்கு விளங்காநிற்கும்" என்று கூறுவர்.

1. Dr. உ. வே. சாமிநாதையர்.

2. ' இற்றைக்கு 700-வருடங்களுக்கு முந்தியிருந்தாரென்று மட்டும் தெரிகின்றது - பதிப்புரை. பக். 19. (2nd Edition in 1927.) <

3. The date of Meikandar has bcer fixed to be about A. D. I232.—A. R. for 1935-36. para 86. 33-33189. Vol. III. pp. 89-90.{{Rule}<

  1. Dr.உ.வே.சாமிநாதையர்
  2. இற்றைக்கு 700 வருடங்களுக்குமுந்தியிரூந்தாரென்றுமட்டும் தெரிகின்றது பதிப்புரை பக்.19(2n Edition in 1927