பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297

மாணிக்கவாசகர்

 திருவாலவாயுடையார் திருவிளையாடல், தாம் குதிரை வாங்கக் கொணர்ந்த பொன்னத் தாம் விரும்பியவாறே பலர்க்கும் கொடுத்தாரென்றும், உடன் வந்த குதிரைத் தலைவர் முதலியோரை நோக்கி, "ஆடி மாதத்தில் குதிரை ஆள் வாரா" ஆவணியில் தான் அவைவரும் : அப்போது நல்ல குதிரைகளை நாமே வாங்கி வருவோம்: இதனைப் பாண்டி வேந்தனுக்கு உரைமின்' என்று சொல்லி விடுத்தாரென்றும். கூறுகிறது. திருவாதவூரடிகள் அரசன் ஒலையைக்கண்டு ஞானகுரவரிடம் விண்ணப்பிக்க அவர் ஒரு மாணிக்க மணியை அவரிடம் தந்து இதைக் கையுறை யர்கக் கொண்டு சென்று பாண்டியனுக்குத் தந்து குதிரை கள் ஆவணி மூலநாளில் வருமெனத் தெரிவிக்க என்றார் என்று திருவாதவூரர் புராணம் கூறுகிறது. மாணிக்கம் தந்த இச்செய்தி திருவாலவாயுடையார் திருவிளையாடலில் இல்லை பிட்டுவாணிச்சியாகிய முதியவள் பெயரைச் செம்மனச் செல்வியெனத் திருவாதவூரர் புராணம் கூறப்பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம், வந்தி என்று கூறு கிறது .திருவாலவாயுடையார் திருவிளையாடல் ஒரு பெய ரையும் குறிக்கவில்லை.

இறைவன் கூலியாளாய் வந்து உறங்குவார் போலக் கிடக்கையில் அரிமர்த்தன பாண்டியனே சென்று கோலால் அடித்தான் என்று பரஞ்சோதியார் கூறுவர். ஏனைய யாவும் அவ்வாறு கூறவில்லை. இக்கூற்றை ஆராய்ந்த உயர்திரு. மறைமலலயடிகள், "திருவாதவூரடிகளே,கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண் சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்"1' [1]எனவும், "மண்டான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித், தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட, பண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ எனவும் நேரிருந்து கண்டு பாண்டியனே சிவபிரானைத் தண்டால் அடித்

.


  1. திருவம்மானை.8