பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

301

முதலிய மூவரும் அருளிச் செய்த திருமுறைகட்குப் பின்னே வைத்து முறை செய்யப் பெற்றுள்ளன; திரு. ஞான சம்பந்தர் முதலிய திருமுறை ஆசிரியன்மார்களைக் குறிக்கும்போது திருவாதவூரர் பெயர் நான்காவதாகவே குறிக்கப் பெறுகிறது. சமயகுரவர் நிரலில் திருவாதவூரர் நான்காமவராகக் கூறப்படுதற்கேது திருமுறைதொகுக்கப் பெற்ற முறையே யெனினும், பட்டினத்தடிகள் "வித்தகப் பாடல் முத்திறத் தடியர்" என அம்மூவரையும் முன்னர்க் கூறித் "திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளே " யெனப் பின்னர்க் கூறியிருப்பதும் ஒன்ருகும். இனி, ஒன்பதாங் திருமுறையில் கோயிற் பதிகத்தில் பூந்துருத்தி நம்பிகாட நம்பி, நாவரசரை முதலிலும், இடையில் திரு. ஞான சம்பந்தர் சேரமான் பெருமாள் என்ற இருவரையும் இறுதியில் நம்பியாரூரரையும் பாடித் திருவாதவூரடிகளைக் குறி தொழிகின்றார். மெய்கண்டார்க் காலத்துக்கு, முன்னே தோன்றிய திருக்களிற்றுப்படியா ரென்னும் நூலையெழுதிய சான்றோர், நம்பிகாட நம்பி கூறியது போலவே திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், நம்பியாரூரர் என்.தி இந்த முறையிலேயே கூறுகின்றார். திருஞான சம்பந்தரை முதலாக வைத்தும் திருவாதவூரடிகளை நான் காமவராக வைத்தும் கூறும் முறை நம்பியாண்டார் நம்பியால் அமைக்கப் பெற்றுப் பின்வந்த அறிஞர் பலராலும் மேற்கொள்ளப்பட்ட தொன்றாகும். ஆகவே, இம்முறை. வைப்பைக் கொண்டு திருவாதவூரரைத் திருஞான சம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத்தால் பிற்பட்டவரென்பது நிரம்பிய வலியுடைத்தாக இல்லை. திரு. T. P. பழனியப்ப பிள்ளையவர்கள் இந்நால்வரது வைப்பு முறை அவர் பாடியுள்ள திருப்பதிகங்களின் தொகை பற்றி அமைந்திருக்கலாம்[1] என்பது ஈண்டுக் கருதத்தக்கது.

"அத்வைதம் என்று வழங்குகிற ஏகாத்ம வாதம் அல்லது மாயாவாதம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் நாட்டில் ஜனங்களால் கைக்கொள்ளப் பட்டிருப்ப


  1. 1. J. S. V. O. I. Vol. IV. p. 175.