பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{302|சைவ இலக்கியவரலாறு|}

 தாகத் தெரியவில்லை. அக்காலத்துக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தகங்களில் இதன் பெயரைக் காணோம். தேவாரங்களில் இதன் பெயர் காணப்படவில்லை. அக்காலத்தில் தமிழ் நாட்டில் பிரசாரத்தில் இருந்த மதங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. சங்கராசாரியார் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தவரென்று சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். அவர் காலத்தில் தான் இவர் மதம் தலையோங்கியது.தமிழிலுள்ள நிகண்டுகளில் சூடாமணி நிகண்டு கி. பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இயற்றப்பட்டது. அதற்கு முந்தியது பிங்கலம் : அதற்கு முந்தியதுதிவாகரம்.திவாகரத்தில் அறுவகைச் சமயங்களே சொல்லப்பட்டிருக்கின்றன ; அவை, வைசேடிகம், நையாயிகம், மீமாஞ்சை, ஆருகதம், பெளத்தம், லோகாயதம்' என்பன. பிங்கலத்தில் மூன்றாவது ஐயர் வகையில் புறச்சமயமாக உலகாயதம், புத்தம், சனம், மீமாஞ்சை, பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம்' என்னும் ஆறும், உட்சமயமாக, வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம், சைவம்' என்னும் ஆறும் கூறப்' பட்டுள்ளன; சூடாமணி நிகண்டில் உட்சமயமும் புறச்சமயமும் தச்சம. யமும் பின்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. உட் சமயமாறாவன சைவம், பாசுபதம், மாவிரதம், காளா முகம், வைரவம் என்பன ; புறச்சமய மாறாவன, உலகாய தம், பெளத்தம், ஆருகதம், மீமாஞ்சை, மாயாவாதம், பாஞ் சராத்திரம் என்பன. புறச் சமயங்களில் ஒன்றாகிய மாயா வாதம் நிகண்டுகளில் பத்தாம் நூற்றாண்டின் துவக்கத் தினதாகிய சூடாமணி நிகண்டில் முதலில் சொல்லப்படுகிறது. இதற்குப் பிற்காலத்தில் வைணவ சமயாசிரியர்கள் சைவ சந்தானாசரியர்கள் இவர்களிற் பலர் மாயா வாத கண்டனம் எழுதியிருக்கிறார்கள். வாதவூரடிகள் போற்றித் திருவகவலில் “மிண்டிய மாயா வாதமென்னும் சண்டமாருதம் சுழித்தடித் தார்த்து" என்று சொல்லியிருப்பது இவர். கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்தாரென்பதை வற்புறுத்தும்."1[1]

1. தமிழ் வரலாறு. 1. பக். 104-5. (முதற் பதிப்பு)


  1. தமிழ் வரலாறு.1.பக்.104-5