பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

303

மாணிக்கவாசகர்

 இனி, சங்கரர் காலத்தைப் பற்றி ஆராய்ந்த அறிஞருள் தெலாங் (Telong) என்பவர் ஆவர்.கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தாரென்றும், R. G. பந்தர்க் கார் முதலியோர் சங்கரர் காலம் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி யென்றும் மாக்ஸ்முல்லர் (Max Muller) முதலியோர். கி. பி. 788-க்கும் 820-க்கும் இடைப்பட்டதென்றும், பேராசிரியர் கீத் (Prof. Keith) கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியென்றும் கூறுவர்.K. S. இராமசாமி சாஸ்திரி முதலியோர் வேறுபட்டுக் கூறினராயினும், காம்போஜ நாட்டிற் காணப்படும் கல்வெட்டொன்றைக் கொண்டு K.A. நீலகண்ட சாஸ்திரி கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு சங்கரர் வாழ்ந்த காலம் என்று குறிப்பது பொருத்தமாக இருக்கிறது. சங்கரர் உரைத்த அத்வைத வேதாந்தத்தை மாயா வாதமென வழங்கியதுண்டு என்பதை இராமாநுசரும் மாத்துவரும் பிறரும் குறிக்கின்றனர். ஆதலால், இங்கே பிள்ளையவர் கள் எடுத்தோதும் ஏது பொருத்தமாகவேயுளது. தமிழ் நாட்டில் சைவாகமங்கள். தேவார காலத்திற்குப் பின்பே பரவின . தேவாரங்களில் அவை ஏனை வேத வேதாங்கங்களைப் போல மிகுதியாகக் குறிக்கப்படா மையே இதற்குச் சான்றுஎன்றும், திருவாசகத்தில் சிவாகமங்களைப் பற்றிய குறிப்பு மிகுதியாகவுளது என்றும், அடிகள் வாழ்வில் நிகழ்ந்த ஞானோபதேச நிகழ்ச்சி முதலியன ஆகமம் கூறும்முறையிற் சிறிது வேறு பட்டிருப்பதால், சைவாகமநெறி நாட்டில் சிறிது பரவியும் பரவாமலும் இருந்த காலம் அடிகள் காலம் என்றும், எனவே அடிகள் ஞானசம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத்தால் பிற்பட்டவராவர் என்றும் கூறுகின்றார். இச் சைவாகமங்களுட் சில தேவார ஆசிரியர்கட்கு முன்பும் பின்பும் மணிவாசகருக்குப் பின்பும் தோன்றியனவாதலால், அவற்றைக் கொண்டு அடிகள் காலம் தேவார ஆசிரியர்கட்குப் பின்னதாம் என்பது பொருந்தா தென்பர் உயர்திரு மறைமலையடிகள்.[1]

1. மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்.பக். 180-2.


  1. மாணிக்கவாசகர்வரலாறும்கால ஆராய்ச்சியும்.பக்.180-2