பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:306

 சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் மாணிக்கவாசகர் தோன்றவில்லை என்றும், அதனால் அவர் திருத்தொண்டத் தொகையில் மணிவாசகரைக் கூறவில்லை என்றும் கூறி, முடிவில், திருவாதவூரடிகள், வைணவ ஆழ்வார்களான பெரியாழ்வார், ஆண்டாளாகிய இருவரும் வாழ்ந்த காலத்தில் முதுமையுற்ற சிவனடியாராய் இருந்திருப்பார் என்றும், அக்காலமே இரண்டாம் வரகுணன் (கி.பி. 870): காலம் என்றும், எனவே, வாதவூரடிகள் அப்பர் திருஞான சம்பந்தர் என்ற இருவர்க்கும் இரண்டு நூற்றாண்டு பிற்பட்டவர் எனவும், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 50 ஆண்டுகள் இளையர் என்றும், நம்மாழ்வார்க்கு ஒரு தலைமுறை மூத்தவரென்றும் கூறுகின்றார்:1[1] - இனி, திரு. அய்யங்காரவர்கள், திருக்கோவையாரில் வாதவூரடிகளால் குறிக்கப்பெற்ற வரகுணன் அம்பாசமுத்திரத்துக் கல்வெட்டிற் காணப்படும் வரகுணனே என்றும், அவன் சிவன்பால் சிறந்தஅன்புடையவன் என்றும் கூறி, அடிகள்.அவன் காலத்தவரே என்றுமுடிக்கின்றார். பாண்டியர்களைப் பற்றி நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகளில் இடைக்காலப்பாண்டியருள் வரகுணன் என்னும் பெயருடையார் இருவரே காணப்பட்டுள்ளனர். இவருள் முதல் வரகுணன் அம்பாசமுத்திரம் கல்வெட்டுக் குரியவன் ; பின்னவனான இரண்டாம் வரகுணன் முதல்வனுக்குப் பெயரன்; திருச் செந்தூரிலுள்ள அவனது கல்வெட்டு ஒன்று தவிர வேறு ஒன்றும் இப்போதுஇவனைப்பற்றி அறிந்துகொள்ளற்குத் துணை செய்யவில்லை என்று பாண்டியர் வரலாறுஎன்னும்நூல்2[2]கூறுகிறது. வாதவூரடிகளாலும் பட்டினத்தடிகளாலும் நம்பியாண்டார் நம்பியாலும் குறிக்கப்படும் வரகுணன் முதல் வரகுணனே என்பது,அவனுடைய திருவியலூர்,3[3] திருநெய்த்தானம்,4பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag, கும்பகோணம்,6[4]

1. Tamil Studies. p. 409. 2. T. V. S. பாண்டியர் வரலாறு. பதிப்பு. II. பக். 76. 3. M. E. A. R. No. 17 of 1907.

4. S. I. I. Vol. V. No. 608.

5. A. R. No. 364 of 1907. 6. A. R. No. 13 of 1908.


reflist}}

  1. Tamil Studiesபக்.409
  2. T.V.S.பாண்டியர் வரலாறுபதிப்பு IIபக்.76
  3. M.E.A.R.No. 17of1907
  4. A.R.No.13 of 1908