பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

307

 செந்தலை1, திருச்சிராப்பள்ளி2, திருக்கோடிகா3, அம்பா சமுத்திரம்,4 தளபதி சமுத்திரம்,5 கழுகுமலை,6 ஏர்வாடி7 என்ற இடங்களிலுள்ள கல்வெட்டுக்களால் வலியுறுகின்றது.

இனி, இத்துறையில் முயன்ற திரு. T. P. பழனியப்ப பிள்ளை, திருவாதவூரடிகள் அருளிய போற்றித் திருவகலில் கூறியருளும் "கலைபார் அரிகேசரியாய் போற்றி"8 என்பதுபற்றித் திரு.மு.இராகவையங்காரவர்கள் அரி கேசரி யெனப் பாண்டியர் கொண்டுள்ள சிறப்புப் பெயர் சிவபிரானுக்கே ஏற்றது என்ற குறிப்புத் தோன்ற வாதவூரடிகள் பாடுதலும் இங்கு ஒப்பிட்டறியத்தகும்'9 என்று கூறினராக, அதனைமறுத்து, அரிகேசரி என்றது ஓரிடத்தையும், அரிகேசரியாப் என்றது அங்கே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானையும் குறிக்கும்'10 என்று கூறுகின்றார். மேலும், இதனையே விளக்கலுற்று, மதுரைமாவட்டத்துச் சின்னமனூரை அரிகேசரி நல்லூர் என்றும், அங்குள்ள சிவன் கோயில் இராஜசிம்மேச்சுரம் என்றும் அவ்வூர்க் கல்வெட்டுக்கள் கூறுகின்றன என்றும், எனவே சின்னமனூரென இப்போது வழங்கும் அரிகேசரி நல்லூரையும் அங்குள்ள இராஜசிம்மேச்சுரமுடைய சிவபெருமானையுமே வாதவூரடிகள் "அரிகேசரியாய்” என்ற சொல்லால் குறிக்கின்றார் என்றும் கூறுகின்றார்.11

திருவாதவூரடிகள் அருளிய "அரிகேசரியாய்” என்னும் சொல் அரிகேசரி நல்லூர் என்னும் ஊரைக்குறிக்கும் என்பது ஒக்குமாயினும், சின்னமனூரான அரிகேசரி


1. S. I. I. Vol. VI. No. 446.
2. Annual Report on Archeological Survey of India for 1903-4. p. 275.
3. A. R. No. 37 of 1931. 4. A. R. No. 104 of 1905.
5. A. R. No. 12 of 1928-9. 6. A. R. No. 863 of 1917.
7. A. R. No. 605 of 1915, 8. திருவாச. போற்றி,190
9. ஆழ்வார்கள் கால கிலே. பக். 176, 10. J. S. V. O. R. Institute. Vol. IV. p. 156.
11. Journal of Sri Venkatcswara Orienta} Institute vol. IV. p. 156-7. g