பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:308

 நல்லுரே ஈண்டு வாதவூரடிகளால் குறிக்கப்படுகிறதென்பது பொருந்தாது. பாண்டிநாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தைச்சேர்ந்த கிரியம்பாபுரமும்,தென்காசிப் பகுதியினைச்ச்சேர்ந்த காடுவெட்டி யென்னும்ஊரிலுள்ளகல்வெட்டுக் குறிக்கும் களக்குடி நாட்டுக் களக்குடியும், அந்நாளில் அரிகேசரிநல்லூரென வழங்கின.1[1] அங்கேயுள்ளசிவன்கோயில்களுக்கு அரிகேசரீச்சுரம்2< ref>A.R.No 455- 473of1916:A.R.No323of1918 and201of1935-6</ref>என்றும் பெயர்,கூறப்படுகிறது. இவற்றை நோக்கின், அரிகேசரியாய் என்பது அரிகேசரிச்சுரமுடையாய் என்று பொருள்படுமே தவிர அரிகேசரிநல்லூரிலுள்ள இராசசிம்மேச்சுரமுடையாய் என்று பொருள்படுமெனக் கொள்வது நேரிதன்று. இவற்றின் வேறாக அரிகேசரிநல்லூர் என்றே ஒர் ஊர் திருநெல்வேலிவட்டத்தில் உளது; ஆனால் அஃது. இப்போது அரி கேசவநல்லூரென வழங்குகிறது. இனி, இடைக்காலப் பாண்டிவேந்தருள் அரிகேசரி என்ற சிறப்புடையார் இருவர் காணப்படுகின்றனர்; அவருள் நெல்வேலிச் செருவென்ற நெடுமாறன் ஒருவன் அவன் பெயரனை பராங்குசன் முதல் இராசசிம்மன் 'ஒருவன், இவருள் முன்னவன் மாறவன்மன் அரிகேசரி என்னும் பின்னவன் மாறவன்மன் அரிகேசரி பராங்குசன் என்றும் கூறப்படுவர். சின்னமனுாரான அரிகேசரி நல்லூரிலுள்ள இராசசிம்மேச்சுரத்தை எடுத்துத் தன் சிறப்புப்பெயரான அரிகேசரி யென்பதை ஊர்க்கும், இராசசிம்மன் என்ற பெயரைத் தான் எடுத்த கோயிற்கும் வழங்கியிருக்கலாம். இனி, திருநெல்வேலி வட்டத்துக் கிரியம்பாபுரத்திலும் கரவந்தபுரம் எனப்படும் களக்குடியிலும் உள்ள சிவன் கோயில்களுக்கு அரிகேசரீச்சுரம் என்ற பெயர் காணப்படுகிறது. அரிகேசரியான முதல் இராசசிம்மன் எடுத்தவை அரிகேசரீச்சுரமெனப்படாது இராச சிம்மேச்சுரமென்றே வழங்குவதைச் சின்னமனூர்க் கல் வெட்டுக்

1. A. R. No. 323 of 1918; A. R. No. 456 of 1916.

2. A. R. No. 455-473 of 1916; A. R. No. 323 of 1918; 200 and 201 of 1935-6, . . . -


  1. A.R.No. 323. of1918