பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:310

 தோள் மன்னர்கோன் வரகுணவர்மன் " என்று கூறுகின்றன. இச்செப்பேட்டுத் தொடர்களை இரண்டாம் வர குணனைவிட முதல் வரகுணனை உயர்த்தி " மகாராசன்' என்று கூறுவது குறிக்கத் தக்கது. முதல் வரகுணன் ஆட்சியில் தோல்வியே இல்லாதிருக்க, இரண்டாம் வரகுணன் சோழநாட்டுத் திருப்புறம்பயப் போரில் தோல்வி எய்தித் தன் பாண்டி நாட்டுக்குத் திரும்பி ஓடிய செய்தி சிறந்த, நிகழ்ச்சியாகவுளது. இந்நிலையில் நம்பியாண்டார் நம்பிகள் தாம் கேள்வியுற்ற செய்தியொன்றை விளங்கக்கூறு கின்றார், வரகுணபாண்டியன் போர்க்களம் புக்கபோது பகைவர் எறிந்த கணைகள் அவன்மேல் படாது வளைந்து திருவடியில் வீழ்ந்தன ; அது கண்டிருந்த கோயில் அடியார்கள், வரகுணமகாராசர் சிவன்பாற் பெரிய அன்புடையர் : பகைவர்விட்ட கணைகள் அவர் திருவடியில் வீழ்வது தக்கதே என்று பரிந்து பேசிப்பாராட்டினர். இதனை, "பொடியேர் தருமேனியனாகிப் பூசல்புக அடிக்கே, கடிசேர் கணை குனிப்பக்கண்டு கோயிற் கருவியில்லார், அடியே படஅமையும் கணஎன்ற வரகுணன்"என்றுபாடிக்காட்டு கின்ருர். இப்பாட்டுக்குரியவன் முதல் வரகுண்னேயாதல்" தெளியப்படும். படவே, திருவாதவூரடிகள், "வரகுணனாம் தென்னவனேத்து சிற்றம்பலத்தான் " என்றும், "சிற்றம் பலம் புகழும் மயலோங்கு இருங்களியான வரகுணன் " என்றும் குறிக்கும் வரகுணன் முதல் வரகுணன் என்பதும் தெளிவாம். இவ்வாற்றால் திருவாதவூரடிகள் முதல் வர குணன் காலத்தவரென்று கோடலே சிறப்பு.

திரு. T. P. பழனியப்ப பிள்ளையவர்கள், அடிகளாற் குறிக்கப்படும் வரகுணன் இரண்டாம் வரகுண பாண் டியனே என்பாராய், முதல் வரகுணனுடைய போர்ச் செயல்கள் பலவும் வேணுட்டரசரோடும், மேலேக் கொங்கு காட்டு அதிகர்களோடும் அமைகின்றன என்றும், பின்னவ னை இரண்டாம் வரகுணன்செயல்கள் இடவை, வேம்பில் திருப்புறம்பயம் என்ற சோழநாட்டு ஊர்களில் நிகழ்ந் திருக்கின்றன என்றும், திருவாதவூரடிகள் சிற்றம்பலம் பரவிய வரகுணன் எனத் திருக்கோவையாரில் சிறப்பிக்