பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

313


திருவிடைமருதில்[1] எனவரும் திருவிடைமருதூர்க் கல்வெட்டே இதற்குச் சான்று பகர்கிறது. இதனால் இக் கல் வெட்டு மணிவாசகப்பெருமான் காலத்துக்குப் பிற்பட்ட :தென்பது தெளிவாம். இதன்கண் வரும் மாணிக்கக் கூத்தன் என்ற திருப்பெயர், அடிகள் வழங்கியது என்றும், இதனை நயந்து கண்ட அக்காலத்துச் சான்றோர் இறை வஜன இப்பெயரிட்டுப் போற்றிக் கல்லில் பொறித்துக் கொண்டனர் என்றும், இவ்வாறே திருஞான சம்பந்தர் முதலிய பெருமக்கள் வழங்கியருளிய சொற்ருடர்களால் இறைவனைப் போற்றிப் பாராட்டிக் கல்லில் பொறிப்பது வழிக்கம் என்றும் தெளிய உளங்கொள்ள வேண்டிய உண்மையாகும்.

இதுகாறும் செய்து போந்த ஆராய்ச்சிகளால் திருவாதவூரடிகள் திருஞான சம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத்தால் முற்பட்டவரல்லர் பிற்பட்டவரே என்பதும், அவராற் சிறப்பிக்கப்பெற்ற வரகுணமகாராசன், இரண்டாம் வரகுணனல்லன் முதல் வரகுணனே என்பதும், எனவே அவர் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் முற்பாதியில் இருந்து சிறந்தவர் என்பதும் தெளிவாய் விளங்குகின்றன. இனி, திரு. T. P. பிள்ளையவர்கள், தில்லையம்பலத்தில் திருமால் கிடந்த கோலமாய் விளங்குவதை, புரங்கடந்தான் அடிகாண்பான் புவி விண்டு புக்கு அறியாது. இரங்கிடு எந்தாய் என்று இரப்பத் தன் ஈரடிக்கு என் இரண்டு கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதுங் காட்டிடு என்று வரங்கிடந்தான் தில்லேயம்பல முன் றில் அம்மாயவனே ? என்று திருக்கோவையாரில் குறித் தருளியிருப்பவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், சேரமான் பெருமாள் முதலியோரும். திருமழிசை ஆழ்வாரும் தில்லேயில் திருமால் இருக்கும் இருப்பைக் குறிக்கவில்லை என்றும், தில்லேக் கோயிலிலுள்ள திருமால் கோயிற் பகுதியாகிய திருச் சித்திரகூடம் அவர்கள் காலத்துக்குப் பின்னே தோன் .


  1. 1. S. I. I. Vol. V. No. 710. (A. R. No. 146 of 1895). - 2. திருக்கோவை. 86. "