பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

315

காங்குப்பாடிய திருப்பதிகங்களின் தொகுதியாகும். திருக்கோவையார் என்னும் நூல்மாத்திரம் நானூறு கட்டளைக் கலித்துறைகளால் நானூறு அகப்பொருள் துறைகளைப் பொருளாகக் கொண்டு எழுந்த கோவை நூலாகும்.

இத் திருக்கோவையாரைத் திருவாதவூரடிகள் பாடவில்லை என்றும், நம்பியாண்டார் நம்பி, தாம் பாடிய கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் "திருவாதவூர்ச் சிவபாத்தியன், செய் திருச்சிற்றம்பலப் பொருளர் தரு திருக் கோவை " என்றவிடத்தில் திருவாதவூர்ச் சிவபாத்தியன் என்றது. திருவாதவூரடிகளையன்று, அது வேறே ஒருவரைக் குறிக்குமென்றும் சிலர் கூறுகின்றனர். இக்கூற்றைத் திரு. பிள்ளையவர்கள் தக்க காரணங்காட்டி மறுக்கின்றார், ஈழநாட்டுக் கொழும்பிலுள்ள பொருட்காட்சிச் சாலையில் திருவாதவூரடிகளின் திருவுருவம் ஒன்று இடக்கையில் ஒலைச்சுவடியொன்றைப் பற்றிக்கொண்டிருக்கும் வகையில் அமைந்துளது : அச்சுவடியின்மேல் "நமச் சிவாய" என்பது பொறிக்கப்பட்டுளது : தஞ்சை மாவட்டத்து மதுக்கூரில் காணப்பட்டுச் சென்னைப் பொருட்காட்சிச் சாலைக்குக் கொணரப்பட்ட திருவாதவூரடிகள் திரு வுருவம் ஒன்று இடக்கையில் ஒலேச்சுவடி யொன்றை ஏந்திக் கொண்டிருக்கும் வகையில் அமைந்துளது : அச்சுவடியின் மேல் "ஓம் திருவளர் தாமரைசி" என்ற குறிப்புப் பொறிக்கப்பட்டுளது என்று கூறி இவையிரண்டும் கி. பி. பதினென்று பன்னிரண்டாம் நூற்றாண்டினவாகலாமென்றும் கூறுகின்றார். நமச்சிவாய என்று பொறிக்கப்பெற்ற சுவடி திருவாசகத்தையும் மற்றையது திருக்கோவையாரையும் குறித்து நிற்பது யாவரும் இனிதறியக் கூடியதொரு செய்தியாகும் ; ஆகவே, ஒவிய நெறியாலும் வழக்காற்றாலும் திருக் கோவையாரைப் பாடிய ஆசிரியர் திருவாதவூரடிகளை என்பது தெற்றென விளங்கவும் இல்லையென மறுப்போரது மறுப்புரை "உலகத்தோர் உண்டென்பது இல்" என்பார் கூற்றாய்ப் புறக்கணிக்கப் பட வேண்டிய தொன்றேயாகிறது.

இனி, திருவாசகத்தில், சிவபுராணம் முதல் அச்சோப்