பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

சைவ இலக்கிய வரலாறு


பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பகுதிகள் உள்ளன. இவற்றுள் சிவபுராணம், அற்புதப்பத்து, அதிசயப்பத்து குழைத்தடத்து, சென்னிப்பத்து, ஆசைப்பத்து, வாழாப்பத்து, அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, புணர்ச்சிப் பத்து, அருட்பத்து என்ற இவற்றைத் திருவாதவூரடிகள் பாண்டியன்பால் முடிவாக விடைபெற்றுக் கொண்டு திருப்பெருந்துறையை அடைந்து ஞானகுரவனக் கண்டு வழி பட்டு, அந்த ஞானகுரவர் மறைந்தபின் அங்கேயே அடியார் கூட்டத்தோடு தங்கியிருந்து பாடினர் என்றும், திருவார்த்தை, எண்ணப்பதிகம், திருவெண்பா, பண்டாய நான்மறை,[1] திருப்பள்ளியெழுச்சி, திருவேசறவு, ஆனந்த மாலை, உயிருண்ணிப்பத்து, பிரார்த்தனைப்பத்து திருப்பாண்டி விருத்தம் என்ற பதிகங்களைப் பின்னர்ப் பாடின ரென்றும், பின்னர் ஒருநாள் பொய்கையில் தீப்பிழம்பு தோன்றக் கண்ட ஏனை அடியார்கள் திருவைந்தெழுத்தை யோதிப் பொய்கையில் மூழ்கி ஆங்குக் காட்சியளித்த சிவ பரம்பொருளின் திருவருள் ஒளியில் கலந்து கொள்ளவும், கொன்றை மரம் ஒன்றின் நீழலில் தனித்திருந்து சிவயோகம் புரிந்து கொண்டிருந்த அடிகள் மாத்திரம் தனித்து நின்றேழிந்தமைக்கு வருந்தியழுத காலையில் திருச்சதகத்தைப் பாடினார் என்றும், பிறகு ஞானகுரவர் ஆணேப்படியே திருவுத்தர கோசமங்கைக்குச் சென்று குர வரது காட்சி யெய்தப்பெறாது வருந்திய காலத்தில் நீத்தல் விண்ணப்பத்தைப் பாடினர் என்றும், திருவாரூர்க்குச் சென்ற போது திருப்புலம்பலையும், சீர்காழி யில் பிடித்தபத்து என்னும் திருப்பதிகத்தையும், திரு வண்ணுமலேக்குச் சென்று தங்கியிருக்கையில் மார்கழித் திங்கள் வரக் கண்ட மகளிர் மார்கழி நீராடும் திறத்தைக் கண்டு அந்நீராட்டு முறையிலே திருவெம்பாவையையும், அந்நகரிடத்தே மகளிர் அம்மனேயாடுவது கண்டு திரு வம்மானே யென்னும் திருப்பதிகத்தையும், திருக்கழுக் குன்றம் சென்று தங்கியிருக்கையில், திருக்கழுக்குன்றப்


  1. 1. இது திருவாதவூரர் புராணத்திற் காணப்படவில்லை.