பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

சைவ இலக்கிய வரலாறு


ருந்தே குழைத்தபத்து, அருட்பத்து என்ற இரண்டையும் பாடினரெனவும், குறித்த காலத்தில் குதிரை வாராமை கண்டு பாண்டியன் அடிகளைத் துன்புறுத்திய போது, அடைக்கலப்பத்தையும், அங்கே ஒரு மரத்தில் தங்கியிருந்த குயிலொன்றைப் பார்த்துக் குயிற்பத்தையும் பாடின ரெனவும், இறைவன் குதிரைச் சேவகனாய் வந்தது கண்டு அன்சீனப்பத்து என்ற பதிகத்தையும், பாண்டியன் பரிசு நல்கியது கண்டு பிடித்தபத்து என்ற பதிகத்தையும், பின்பு பரிகளெல்லாம் நரிகளாய் ஒடிப்போனபோது அடி களே வேந்தன் சிறையிட்ட காலத்தில் திருவேசறவு என்ற பதிகத்தையும், முடிவில் பாண்டியன்பால் விடைபெற்றுப் போந்த அடிகள் சொக்கேசர் திருக்கோயிற்குச் சென்றபோது சிவபுராணத்தையும் பாடினாரெனவும் கூறுகிறது.

இனி, இப்போது நிலவும் திருவாசக நூலைக் காணுங்கால், அதன்கண், அடிகள் திருப்பெருந்துறையில் பாடியன அற்புதப்பத்து முதல் திருப்பள்ளியெழுச்சி யிருகவுள்ள இருபத்து மூன்றும் என்றும், மதுரையில் பாடியன குழைத்த பத்து முதல் சிவபுராணம் ஈருக எட்டும் என்றும்: திருவுத்தரகோசமங்கையில் பாடியது.நீத்தல்விண்ணப்பம் என்றும், திருக்கழுக்குன்றத்திற் பாடியது திருக்கழுக் குன்றப்பதிகம் என்றும், தில்லையில் பாடியன ஏனைப் பதினெட்டும் என்றும் காணலாம். இவற்றைக் கானுமிடத்து, திருவாதவூரடிகள், மதுரையிற் பாடியதாக ஒரு திருப் பதிகத்தையும் குறிக்காமல், அடிகள், திருவுத்தர கோச மங்கைக்குச் சென்று பின் திருக்கழுக்குன்றம் அடைந்து முடிவில் தில்லை சென்று சேர்ந்தாரெனத் திருவாலவாயுடையார் புராணம் கூறுவதும், மேற்கூறிய திருப்பதி கட்கேயன்றி, திருவாரூர், திருத்தோணிபுரம், திருவண்ணாமலை , திருவேகம்பம் ஆகிய திருப்பதிகட்குச் சென்றாரென்றும், திருவாரூர், திருத்தோணிபுரம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு திருப்பதிகமும் திருவண்ணாமலையில் இரண்டு பதிகங்களும் அடிகள் பாடியருளினார் என்று திருவாதவூரர் புராணம் கூறுவதும் பிறவும் ஆராய்தற்குரியவாகின்றன. இதனால், திருவாதவூரடிகள் வரலாற்