பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

சைவ இலக்கிய வரலாறு

எனவும் வருவன நரிகள் பரிகளாக்கப் பெற்றன என்னும் செய்தியை ஆதரிக்கின்றன.

இனி, மணிவாசகர் பொருட்டுக் கரை பெருகி வந்த வையைக்கு வரம்பிடுதல் குறித்துப் பிட்டுவாணிச்சி ஒருத்தியின் பொருட்டு இறைவன் மண் சுமந்து வேந்தனல் அடிக்கப்பட்டான் என்று வரலாறு கூறா நிற்கும். இதற்கேற்பவே, அடிகள், "ஆங்கது தன்னில் அடியவட்காகப், பாங்காய் மண்சுமந்தருளிய பரிசும்"[1] என்றும், "மண் பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளித், தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட, புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ"[2] என்றும், "பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே"[3] என்றும் பன்முறையும் எடுத்தோதுவது ஈண்டு நோக்கத்தக்கதாம். இனி, அடிகள், "நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல், பரகதி பாண்டியற்கு அருளினே போற்றி"[4] என்று கூறுவது, திருவிளையாடற் புராணங்களால் குறிக்கப்படும் வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய செய்தி என்று தமிழ் வரலாறு எழுதிய தஞ்சை, திரு. K. S. சீனிவர்சப் பிள்ளையவர்களும்[5], திரு. T. P. பழனியப்ப பிள்ளையும் கருதுவர்.[6] அருள் திரு. மறைமலையடிகள் பெரும்பற்றப் புலியூர் நம்பி கூறிய மலயத்துவச பாண்டியனையே இவ்வடிகள் குறிக்கின்றன[7] என்று உரைக்கின்றார்,

இவ்வாறே, "நலம் திகழும் கோலமணியணிமாட டுேகு லாவும் இடவைமட நல்லாட்குச், சீலமிகக் கருணை அளிக்கும் திறம் அறிவர் எம்பிரானாவைரே" என்று அடிகள் கூறுவதனாள், இடவை மடநல்லாள் என்றது வரகுணன் மனைவி யாரை என்றும், ஈண்டு வரகுணன் இடைமரு தீசர்க்குத் தன் மனைவியை நல்கிய வரலாறு குறிக்கப்படுகிறது


  1. 1. கீர்த்தி. 46-7.
  2. 2. திருப்பூ. 16.
  3. 3. திருக்கழுக், 2.
  4. 4. போற்றி. 213.
  5. 5. தமிழ் வரலாறு. Part II. பக். 103.
  6. J. S. V. O. I. Tirupati. Vol. IV. p. 167.
  7. திருவாசக விரி. 2 nd, Edn. பக். 326.