பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

327


திருவாசகம்

மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம், அவருடைய பண்டைய உடல் வாழ்வு இம்மை யுடல் வாழ்வு என்ற இருவகை வாழ்வுகளையும் நாம் அறியக் காட்டுகின்றது. பண்டைப் பிறவியை சிவபுராணத்தில்[1] புல் பூடு புழு மரங்களாகவும், பலவகை விலங்கும் பறவைகளுமாகவும், பேய், பூதம், மனிதர், முனிவர், தேவர், அசுரர்களாகவும் பன்முறையும் பிறந்து பிறந்து இறந்து இறந்து இளைத்ததாகவும், திருவம்மானையில்[2] “ஆனையாய்க் கீடமாய்மானுடராய்த் தேவராய், ஏனைப்பிறவாய்ப் பிறந்திறந்து எய்த்ததாகவும்” குறித்தருளுகின்றார்.

இம்மை வாழ்வைத் தன் தாய்வயிற்றிற் கருக்கொண்டது முதலே தொடங்கிக் கூறுகின்றார் போற்றித் திருவகவலில்[3] தாய் வயிற்றிற் கருவிடைத் தோன்றித் திங்கள் தோறும் வளருங்கால் உற்ற துன்பங்களை எடுத்தோதிப் பத்தாந் திங்களில் கருவுயிர்க்குங் காலத்தில் தாய்பட்ட துன்பத்தோடு தானும் பெருந் துன்பமுற்றுப் பிறந்ததும், பிறந்து பெறும் உடல் வாழ்வில், “காலை மலமொடு கடும் பகற் பசி கிசி,வேலே நித்திரை” முதலியவற்றைச் செய்து காளைப் பருவம் எய்தியதும், அப்போது மகளிர் கூட்டத்தில் மயங்கிக் கிடந்ததும், அந்நாளில், கல்வி, செல்வம், நல்குரவு முதலிய நிலைகளில் பயின்று தெய்வமென்பது ஒன்று உண்டு என்னும் சிந்தையுண்டானதும், சிலர் நாத்திகம் பேசியதும், வேதியர் சாத்திரம் கூறியதும், சமயவாதிகள் அமைவுரை வழங்கியதும், மாயாவாதமென்னும் சமயம் போந்து தாக்கியதும், இவற்றால் அலைப்புண்டாலும் தெய்வ வுணர்வில் தான் விடாப் பிடி கொண்டிருந்து, சகம், பேயன் என்று சிரிப்ப, நாண் ஒழிந்து நாடவரது பழித்துரையைப் பூணாகக் கொண்டு மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது ஒழுகியதும், பின்பு இறைவன் அருட்


  1. சிவபு. 25-30.
  2. திருவம்மானை. 14.
  3. போற்றித்திரு. 13.25.