பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331

மாணிக்கவாசகர்

 மான் அருட்குரவனாய் வந்து அருள் ஞான நாட்டம் நல்கின. கை, அவனருளாலே அவனது அருளுருவைக் கண்டு அருளார் இன்பத்தில் மூழ்கினர் நம் மணிவாசகனார். பின்னர், அருட்குரவனது பிரிவு அவர்க்கு ஆற்றொணாத் துயரம் தந்தது. பிறவிக் குருடன் இனிய காட்சிக்கமைந்த கண் பெற்றுப்பின் அதனை இழந்தால் எவ்வாறு வருந்துவானோ அவ்வாறே அடிகளும் வருந்திப் புலம்பினர். அவ்வருத்த மிகுதியைத் திருச்சதகம், கோயின் மூத்த திருப்பதிகம், கோயிற்றிருப்பதிகம், செத்திலாப்பத்து, திருவேசறவு முதலிய பதிகங்கள் பலவற்றிலும் காணலாம். இப்போதும் அப் பாட்டுக்களை இனிய இசையில் தொடுத்துப் பாடலுறின், பாடுவோரும் பாடக் கேட்போரும் கண்ணீர் உகுத்து மனங்கரைந்து உருகுவது கண்கூடு. இவ்வண்ணம் இறைவன் அருட்குரவனாய் வந்து அருளிய ஞானத்தின் நலத்தை எண்ணினர்; எண்ணுங் தோறும் அடிகட்குப் பண்டு தாம் இந்திரிய வயமயங்கி1[1] அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டு அறிவின்றி2[2]நடித்து, மண்ணிடைப் பல பொய்யினைச் செய்து யான் எனது என்னும் மாயப்பாம்பு கடித்தவாயிலேநின்று வினை மிகக் கழறியே திரிந்ததாகவும், அருண்ஞானம் பெற்ற தன் பயனால், பேதைகுணம் பிறருருவம் யான் எனது இறைவன் என்னும் உரை3[3] அற்புதப்பத்துமாய்ந்ததாகவும், உணர்வு தந்து ஒளியாக்கிப் 4பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag உயர்வித்ததாகவும் பிறவும் நினைந்து மணிவாசகர் வியந்து கூறுகின்றார்,

இந்த அருள் ஞானவுணர்வு மிகமிக, அடிகட்கு வீடுபேற். றின்கண் பேரார்வம் பெருகிவிடுகிறது. அவ்வீடு பேற்றை நல்குமாறு இறைவனை வேண்டலுற்று, "எம்பெருமானே, உடைந்து கைந்து உருகி உன் திருமலர்ப்பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன்"6[4]எம்பரமா, என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் பூம்போது அணைவது என்று

1. கண்டபத்து. 1. 2. கண்டபத்து. 8.

3. அற்புதப்பத்து. 3. 4. 62 5. 5. டிை 8. 6. ஆசைப்பத்து. 4.


{{reflist}<

  1. கண்ட பத்து.1
  2. கண்ட பத்து8
  3. அற்புதப்பத்து3
  4. ஆசைப்பத்து 4