பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் 333.

வேற்பர் என்பது சான்ருேர் வ்ரலாற்ருலும் அறிவு நூல் களாலும் அறியப்படுவதொன்று. மணிவாசகப் பெருமா னும் அருள் ஞானப்பேற்றல் தம் கரணங்கள் சிவ கரண மாகப் பேணலுற்றுச் "செடியேறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் முடியேன் பிறவேன்' எனத் தான்பிறவிக்கு அஞ்சாமையைத் தோற்றுவித்து, "கதிக்கும் பசுபாசம் ஒன்றும் இலோம்" யாவர்கோன் என்னேயும் வந்து ஆண்டு கொண்டான் , யாமார்க்கும் குடியல்லோம், யாதும் அஞ்சோம்' எனப் பெருமிதம் தோன்றப் பேசு வன மிக்க இன்பம் தருகின்றன.

திருவருள் ஞானப்பேறும் கருவிகரணங்களேச் சிவகரண மாகப் பேணும் திறமும் உடைய சான்ருேர், தம் கொள்கை கெடாது சிறப்பது குறித்துத் தம்மையொத்த அடியார் கூட்டத்தை விரும்புவர் அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவராகலின், அடியார் தொடர்பு பெரிதும் விரும் பப்பட்டது. அது பற்றியே அடிகள் மேதக்க அடியார் தொடர்பையே வேண்டி, வணங்கற் பொருட்டுத் தலையை யும் வாழ்த்துதற்பொருட்டுவாயையும் அருளிய இறைவன், இணங்கி மனந்துய்மைமிகும் பொருட்டுச் "சீரடியார் கூட் டமும் வைத்து' ச்சிறப்பித்தருளினுன் என்றும், அந்த அடியார்கள்பெற்ற நலத்தை, 'அடியார்சிலர் உன் அருள் பெற்ருர் ' "அருளாரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த' என்றும், "தாரா அருள் ஒன்றின் றியே தந்தாய் என்று உன் தமரெல்லாம் ஆராகின்ருர் 7 என்றும் வியந்தோதி மகிழ்கின்ருர். பின்பு தமக்கு அடியா ரோடு கூடியுறையும் பேறு எய்திய போது, அக் கூட்டத் தால் தமக்குற்ற இன்பத்தை நயங்து பெரு வியப்புற்று,

- குலாப். 2. -

ങ്ങ് 7. திருச்சதகம். 30. திருப்பூவல்லி. 7. பிரார்த்தனே. 2. 4. 9.

ഞ്ഞു. ്.

i