பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:336

 பரவப்படுகின்றான். அதனால் அப்பெருமானுடைய திருவருட் சிறப்பும் தில்லையம்பலத்துப் பெருமாண்பும் ஒவ் வொருபாட்டிலும் சிறப்பிக்கப் பெறுவதைக் காண்கின்றோம். இதுபற்றியே இத்திருக்கோவையார் திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் வழங்குகின்றது.

இத் திருக்கோவையார் பாட்டு ஒவ்வொன்றிற்கும் நூற்பா. யாப்பில் கருத்துரை வகுக்கப்பட்டுள்ளது. இந்நூற்கு உரைகண்ட 1[1]பேராசிரியர் இக்கருத்துரைக்கும் உரை கூறு வதால், இஃது அவர்காலத்துக்கு முன்னரே தோன்றியது என்பது தெளிவு. சிலர், இக்கருத்துரை திருவாதவூரடி களாலே ஆக்கப்பெற்றிருக்கலாம் என்று கூறுவர்; சிலர், திருவாசகப்பகுதி ஒவ்வொன்றிற்கும் கருத்துரை கண்டார் ஒரு சான்றோர் . இக்கோவைக் கருத்துரையையும் அவரே வழங்கியிருக்கலாம் என்பர் ஆயினும், திருவாசகக் கருத்துரையின் நடையும் பொருளும் அக்கொள்கைக்கு ஆதரவு தருவனவாக இல்லை ; மேலும், அது, கோவைக் கருத் துரையினும் காலத்தால் பிற்பட்டது எனக் கருதுதற்கும் இடங்தருகிறது. <bகோவைநூற் சிறப்பு/b>

நூல் நயம் காணும் சான்றோர் அந்தணர், யோகியர், தார்க்கிகர், இயற்புலவர் எனப் பல திறத்தராவர். அவரவரும் தத்தமக்கு ஏற்புடைய நூல்களின் நயம் கண்டு இன்புறுவர்; ஆயினும், திருக்கோவையாரை அந்தணர் முதல் அனேவரும் தாந்தாம் விரும்பும் நூலாக மேற்கொள்வர் என்ற கருத்துப்படப் பிற்காலத்து ஆன்றோர் ஒருவர்,

"ஆரணம் காண்என்பர்அந்தணர்: யோகியர் ஆகமத்தின் - காரணம் காண் என்பர் ; காமுகர் காமநன்னூலதென்பர்"

1. பன்னாட்கு முன்னெல்லாம் திருக்கோவையார்க்கு உரை கண்டவர் நச்சினார்க்கினியரென அறிஞர் கூறி வந்தனர் : பின்னர் நிகழ்ந்த ஆராய்ச்சிகளால் இவ்வுரை பேராசிரியரது என்பது தெளிவாயிற்று.

  1. பன்னாட்குமுன்னெல்லாம் திருக்கோவையார்க்கு உரைகண்டவர் நச்சினார்க்கினியரென அறிஞர் கூறிவந்தனர் பின்னர்நிகழ்ந்த ஆராய்ச்சிகளால்இவ்வுரைபேராசிரியரதுஎன்பது தெளிவாயிற்று.