பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

337

மாணிக்கவாசகர்


ஏரணம் காண் என்பர் எண்ணர் ; எழுத்தென்பர் இன்புலவோர் சீர் அணங்காய சிற்றம்பலக் கோவையைச் செப்பிடினே: என்று கூறியுள்ளார், உரைகாரரான பேராசிரியர், நடம் புரிகின்ற பரமகாரணன் திருவருளதனால், திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவர், ஐம்பொறி கையிகந்து அறிவாய் அறியாச் செம்புலச் செல்வராயினர் ; ஆதலின், அறிவனூற் பொருளும் உலக நூல் வழக்கும் என இரு பொருளும் நுதலி யெடுத்துக் கொண்டனர்; ஆங்கு, அவ்விரண்டனுள், ஆகம நூல் வழியில் நுதலிய ஞான யோக நுண்பொருளினௌ உணர்த்துதற் கரிது; உலக நூல் வழியின் நுதலிய பொருள் இத்திருக்கோவையார் என்று கூறுகின்றார். . இனி, இதன்கண் வாதவூரடிகள் தில்லையம்பலப் பெருமா னுடைய அருணலங்களைத் திருவாசகத்திற் குறித்தவாறே தேன்கலந்ததென இனிக்கும் செஞ்சொற்களால் பாடியுள்ளார். தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவன் திருநடம்புரிந்தருள, அவனை அங்கே அந்தணர் மூவாயிரவர் வணங்குகின்ற திறத்தை அடிகள் , "இருவர் அறியா அடி, தில்லையம்பலத்து மூவாயிரவர் வணங்கநின்றோன்" 1[1] என்பர் , "அவ்வம்பலத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலே, வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றில்அம்மாயவனே2[2] என்று குறிக்கின்றார். இனி, தில்லையம்பலத்தில் இறைவன் திருநடம்புரிவதன் காரணம் கூறுவாராய், ' "பிழைகொண்டு ஒருவிக்கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும் முழை கொண்டு ஒருவன் செல்லாமைப்பொருட்டு அம்பலத்து3[3] ஆடுகின்றான்; அவ்வாடலும், மறந்தும் பிறதெய்வங்களைத் தொழாது தன் திருவடிகளையே தொழுது அடியார்கள் உய்திபெறும் பொருட்டே4[4]</ref>யாம் என்று தெரிவிக்கின்றார். இவ்வாறே

1. திருக்கோவையார். 72. 2. திருக்கோவையார். 86.

3. 62 65. 4. ങ്ങ് 67.

SIV–22


  1. திருக்கோவையார்.72.
  2. திருக்கோவையார்.82
  3. திருக்.65.
  4. திருக்.67