பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 சைவ இலக்கிய வரலாறு

திருவாசகத்துள்ளும் உரைத்துள்ளார். திருவாசகத்திற் குறித்த கருத்துக்கள் பலவற்றை இக் கோவைநூலின் கண்னும் வற்புறுத்துவதை வேறிடங்களிலும் காணலாம். ' வாக்கிறந்து ஊறு அமுதே ஒத்து அகஞ் சேர்ந்து என்ன . உய்ய நின்ருேன் ' என்ற இக்கருத்து, திருவாசகத்தில், மாறி நின்று என்னே மயக்கிடும் வஞ்சப் புலனேந்தின் வழியடைத்து அமுதே ஊறி நின்று என்னுள் எழுபரஞ் சோதி 2 என்றும், விண்ணேமடங்க விரிநீர் பரந்து வெற் புக் கரப்ப, மண்ணே மடங்கவரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் அண்ணல்" என்ற கருத்தைத் திருவாசகத்தில் "வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல்நீர் மண்கெடினும், தான் கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையன்" என் றும், ! ஆனந்தவெள்ளத் தழுந்தும் ஓர் ஆருயிர் ஈருருக் கொண்டு ஆனந்த வெள்ளத்திடைத் திளேத்தாலொக்கும் அம்பலம்சேர், ஆனந்தவெள்ளத்து அறைகழலோன் அருள் பெற்றவரின், ஆனந்தவெள்ளம் வற்ருது முற்ருது இவ் வணிகலமே' என்ற கருத்தைத் திருவாசகத்தில் 'ஆனந்தக் கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வண்ணமே, ஆனந்த மாகி, கின்று ஆடாமேர் தோணுக்கம்' என்றும், "அழி வின்றி. கின்றதோர் ஆனந்தவெள்ளத்திடை அழுத்திக் கழிவில் கருணேயைக் காட்டிக் கடிய வினை யகற்றிப், பழ மலம் பற்றறுத்து ஆண்டவன்' என்றும் கூறுகின்ருர், இவ்வாறே திருவாசகத்தில் கூறிய வரலாற்றுக் குறிப்புக் களுட் சிலவற்றைத் திருக்கோவையாரிலும் கூறுகின்ருர், அவற்றுள் பகலவன் பல்லுகுத்தது, திருமால் ஆயிரம் மலர்கொண்டு அருச்சித்தது? முதலியன சிறந்தனவாம். இறைவன் கூடலில் தமிழாராய்ந்ததும் வரகுணன் வழி பாடு செய்ததும் திருக்கோவையாரில் சிறப்பாகக் கூறப் படும் வரலாற்றுக் குறிப்புக்கள். ,

1. திருக்கோவை. 106. 2. திருவாச. கோயிற். 1. 3. 62 75. 4. திருவா. தெள்ளே. 18. 5. 62 307. 6. திருத்தோளுேக்கம். 8. 7. திருப்பாண்டி. 8. 8. திருக்கோவை. 5.

9. திருக்கோவை. 180.