பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 சைவ இலக்கிய வரலாறு

பரப்பின. அவை, சைவம், பாசுபதம், காபாலம், காருகம் என்பனவாகும். அவற்றுள் சைவமென்பது வடநாட்டு மத்தமயூர சந்தானத்துச் சைவாசிரியர்களாலும், தென் ட்ைடில் கோளகி சந்தானத்துச் சைவாசிரியர்களாலும் வளர்க்கப்பெற்றது. இக்கோளகி சந்தானம் மத்தமயூர சந்தானத்தின் கிளேயென்று கூறுவோருமுண்டு. இச் சைவ சந்தானங்களைப் பற்றிய விளக்கமான குறிப்புக் கள் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டு முதலே காணப்படுகின் றன ; எனினும், இவை பல நூற்ருண்டுகட்கு முன்பே தோன்றியவை யென்பது உண்மை. கி. பி. ஏழு எட்டாம் நூற்ருண்டுகளில் தென்னுட்டில் திருப்புகலூர், மதுரை முதலிய இடங்களில் மடங்கள் இருந்து சமயப்பணி புரிந்த திறத்தைத் திருத்தொண்டர் புராண்ம் கூறுகிறது. திரு. மூலர் திருமந்திரத்தால் சைவ மடங்கள் பல தமிழ் நாட்டில் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டிற்கு முன்பே இருந்து சைவப் பணி செய்தமை குறிக்கப்படுகிறது. சமய நூல் வல்ல " திராவிடப் பிராமணர்கள் வடநாடு சென்று சைவ மடங் களின் ஆதரவில் குடியேறிச் சமயப் பணி செய்த குறிப் பைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இக்குறிப்புக்களால் சைவமெனப்படும் சிவநெறி மிகப் பல நூற்ருண்டுகட்கு முன்பிருந்தே மடங்களின் வாயிலாக அறிவுடைப் பெரு மக்களால் வளர்க்கப் பெற்று வந்துள்ளது என அறிகின் ருேம் அக்காலத்தே வடநாட்டறிஞரும் தென்னட்டறிஞ ரும் மேற்கொண்டொழுகிய சமய நூல்கள் சிவாகமங்கள் எனப்படும். வேதம், உபநிடத மென்பன வைதிக சமய நூல்கள். அவை சைவமே யன்றி ஏனேச் சமயங்கட்கும் பிரம வாதிகளான பிராமணர்களுக்கும் உலகியல் ஒழுக் கங்கட்கே அடிப்படையாய் பொதுவாய் நிலவின : அதனால் வைதிக நெறியைப் பொதுவென்றும், சைவ நெறி

1. Indian Historical Quarterly. Vol. XXVI. No. 1. L. 3. 1-16. 2. திருமூலர் காலம் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டுக்குப் பிற்

பட்டதன்று என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.

3. A. R. for 1917. para 35-8.