பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{|Rh|341மாணிக்கவாசகர்|}}

 யைச்சிறப்பென்றும் பண்டையோர் கருதினர். சைவ நெறிக்குச் சிவாகமங்கள் சிறந்து நின்றமையின், திருவாத வூரடிகள் சிவாகமக் கருத்துக்களைப் பெரிதும் பயின்று ஒதுகின்றார் உயிருள்ளவை உயிரில்லாதவை, மண்ணுலகு விண்ணுலகு நரகம் ஆகிய எல்லாம் பிரமத்தில் தோன்றி யொடுங்குபவை என்று வேத வேதாந்தங்கள் கூறும் : அவற்றின் மாறுபட்டு, உலகு உயிர்கட்கு வேறாகச் சிவம் என்ற பரம்பொருள் ஒன்று உண்டு என்ற உண்மையை அளவைகளால் ஆராய்ந்து துணிந்து கூறுவது பற்றிச் சிவாகமங்கட்குச் சைவ சித்தாந்தம்'1[1]கூறுகிறது என்பதும் பெயரா யிற்று. இவ்வழி வந்த சைவர்கள் தம்மைச் சைவ சித்தாந்திகள் என்பர். எனவே, திருவாதவூரடிகள், சிவாகம நெறி நிற்கும் சைவ சித்தாந்தி யென்பது தேற்றம்.

இச் சைவ சித்தாந்தங்கள் "மகேஸ்வரனால் அருளிச் செய்யப்பட்டவை ; இவர்கள் மேற்கொள்ளும் பொருள் மூன்று: அவை பதி (இறைவன்) பசு (உயிர்கள்) பாசம் என்பன. இவற்றை யுணர்த்தும் ஆகமம் நான்கு பாதங்களையுடையது ; அவை, வித்தை (ஞானம்) கிரியை, யோகம், சரியை எனவரும் : ஞானம் போலவே சரியையும் யோகமும் சிறந்தனவாம். இவற்றுள் யோகத்தின் பயன் சித்தி , சித்திபெற்றோர்சித்தர் எனப்படுவர். பதிப்பொருள் ஒன்று : உயிர்கள் பல பாசம் மூன்று. அவை, ஆணவம், கன்மம், மாயையென்பன. ஆணவம் உயிர்களோடு அனாதி தொடர்புடையது ; ஆணவம் முதலிய மூன்றும் மலமெனவும் வழங்கும்." ' உயிர்களை அனாதியே பிணித்து நிற்கும் ஆணவத்தைப் பசுத்துவம் என்றும், அது காரணமாக வரும் மாயை கன்மங்களைப் பாசம் என்றும் இவற்றையே மும்மலம் என்றும் கூறுவது இச்சைவ நூல் வழக்கு. இவற்றைத் திருஞான சம்பந்தர் முதலியோர், "பசுபாச வேதனை

1. சிவாகமங்களுக்குச் சித்தாந்தம் என்பது பொதுப் பெயர் என மகுடாகமம் கூறுகிறது : இம் மகுடாகமத்தைப் பின்பற்றி யது தில்லைப் பெருங்கோயில்.


  1. சிவாகமங்களுக்கு சித்தாந்தம் என்பது பொதுப்பெயர்என மகுடாகமம் இம்மகுடாகமத்தைப்பின்பற்றியது தில்லைப்பெருங்கோயில்