பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

343


மேலுலகத்தையும் வீட்டுலகத்தையும் பொதுவாக வாராவுலகம் என வழங்குவது சங்கத் தொகை நூல்வழக்கு. அதனைத் திருநாவுக்கரசர் முதலிய சான்றோர்கள் எடுத்தாண்டுள்ளனர். அதனையே அடிகளும் மேற்கொண்டு “வாராவுலகம் தந்து வந்தாட் கொள்வோனே”[1] என்றும், “வாராவுலக நெறியேறக் கோலங்காட்டி”[2] என்றும் ஓதுகின்றார். மேலும், தான் பாடிய திருக்கோவையாரில் அடிகள் சங்க நூற் கருத்துக்கள் பலவற்றை எடுத்தாண்டிருப்பது குறிக்கத்தக்கது. “திருவளர் தாமரை”[3] யெனத் தொடங்கும் திருப்பாட்டில் அடிகள் தலைமகளை, தாமரை முதலிய பூக்கள் கொண்ட “மருவளர் மாலை” யென்று கூறுவது, சிறைக்குடியாந்தையார் என்னும் சான்றோர் தலைவியைக் காந்தள் முதலிய பூக்களே “இடைப்படவிரைஇஐது தொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள்”[4] என்பதை நினைப்பிக்கின்றது. “நீ கண்டனை யெனின்”[5] என்ற பாட்டில் வரும் “சேய் கண்டனையன் சென்று ஆங்கோர் அலவன் தன் சீர்ப்பெடையின் வாய் வண்டு அனையதோர் நாவற்கனி நனிகல்கக் கண்டு பேய் கண்டனைய தொன்றாகி நின்றான்” என்பது, “துறைவன் நெருநை, அகலிலே நாவல் உண்டுறை உதிர்த்த, கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டு தன், தாழை வேரளை வீழ்துணைக் கிடூஉம், அலவற் காட்டி நற்பாற்று இதுவென, நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே”[6] என்பதையும், “நறமனை வேங்கையின் பூப்பாயில் பாறையை நாகம் கண்ணி, மறமனை வேங்கை என நனியஞ்சும்”[7] என்பது, “அடுக்கத்து அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை, மாத்தகட் டொள்வீ தாய துறுகல், இரும்புலி வரிப்புறம் கடுக்கும்”[8] என்பதையும், “மாற்றேன் என வந்த”[9] எனத்-


  1. ஆசைப். 7. 2.
  2. ஆனந்த.3.
  3. திருக்கோவை. 1.
  4. குறுங். 62.
  5. ௸ 84.
  6. அகம். 380.
  7. ௸ 96.
  8. புறம். 202.
  9. ௸ 150.